Tamilnadu
குடும்பத் தகராறில் மனைவி, மாமியாரை நடுரோட்டில் குத்திக் கொலை செய்த வாலிபர்... பதறவைக்கும் CCTV காட்சி!
கடலூர் துறைமுகம் அருகே உள்ள சங்கக்கார தெருவைச் சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி பூங்கொடி. இவர்களது மகள் மீனாவை, கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த நம்புராஜ் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான நம்புராஜ் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்.
நம்புராஜுக்கும், மீனாவிற்கும் மூன்றரை வயதில் ஒரு பெண் குழந்தையும், ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். கடந்த ஓராண்டு காலமாக நம்புராஜுக்கும், மீனாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில், சம்பவத்தன்று மாலை இரண்டாவது குழந்தைக்கு உடல்நிலை சரி இல்லாததால் மீனாவும் அவரது தாய் பூங்கொடியும் கடலூர் முதுநகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களை பின்தொடர்ந்து வந்த நம்புராஜ் சைகையில் மனைவியுடன் பேசியவாறு கூடவே நடந்து வந்துள்ளார். பின்னர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவி மீனாவை சரமாரியாக குத்தியுள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பியோட முயற்சித்த மாமியார் பூங்கொடியை விரட்டிச் சென்று சரமாரியாக கத்தியில் குத்தியிருக்கிறார்.
உடனே, மீனா நம்புராஜை தடுக்க முயற்சி செய்தும் மாமியார் பூங்கொடி மற்றும் மனைவி மீனாவை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியிருக்கிறார் நம்புராஜ். இதில் சம்பவ இடத்திலேயே மீனாவும் பூங்கொடியும் துடிதுடித்து உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்த தகவல் அறிந்த கடலூர் முதுநகர் போலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தாய் பூங்கொடி, மகள் மீனாவின் உடலைக் கைப்பற்றி கடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தக் கொலைச் சம்பவம் குறித்த சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கடலூர் முதுநகர் போலிஸார் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய நம்புராஜை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Also Read
-
4,184 காவலர்களுக்கு முதலமைச்சர் பதக்கங்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை!
-
ஐசிசி தரவரிசைப் பட்டியல்… 5 ஆண்டுகளுக்கு பிறகு ‘நம்பர் 1’ இடத்தில் விராட் கோலி! : முழு விவரம் உள்ளே!
-
288 Iconic Projects : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டம்!
-
கம்பீரின் ஆதரவால் அணிக்குள் வந்தாரா ஆயுஷ் பதோனி? - கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கொந்தளிப்பு!
-
சென்னையில் 1980-களை நினைவுபடுத்தும் ‘VINTAGE BUS’! - மக்கள் பயன்பாட்டிற்காக 5 பேருந்துகள் அறிமுகம்!