Tamilnadu

மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா : சாணிக் கரைசல், மாட்டு கோமியம் பலன் தராது என உணர்ந்துகொண்ட ஹெச்.ராஜா

சீனாவின் வுகான் நகரில் பரவத் துவங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் கொடூரமாக இருந்தது. பிறகு வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இதையடுத்து கொரோனா பரவலைத் தடுக்க மத்திய அரசு தடுப்பூசிகளைக் கண்டறியும் முயற்சியில் இறங்கியது. அப்போது, பா.ஜ.கவை சேர்ந்த எம்.பியான சுமன் ஹரிபிரியா, கொரோனா வைரஸ் தொற்றுக்கான மருந்தாக மாட்டுச் சாணத்தைப் பயன்படுத்தலாம் என தெரிவித்தார். இவரின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும், பா.ஜ.கவைச் சேர்ந்த பல தலைவர்களும், கொரோனாவை குணப்படுத்த, சாணிக் கரைசல், மாட்டு கோமியம் பயன்படுத்தலாம் என வாய்க்கு வந்ததை அறிவியலுக்கு புறம்பாக பேசி வந்தார்கள். இவர்களின் இந்த கருத்து முட்டாள் தனமானது என்பதால், உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்தியாவில், கொரோனா தடுப்பூசி மருந்தாக கோவாக்சின், கோவிஷீல்டு மருந்துகள் தற்போது செலுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து கொரோனாவிற்கு சாணிக் கரைசல், மாட்டு கோமியம் போன்றவை எதுவும் பலன் தராததை உணர்ந்த பா.ஜ.கவினர் தற்போது உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி மருந்தான கோவாக்சி, கோவிஷீல் மருந்துகளை செலுத்திக் கொண்டு வருகின்றனர்.

அவ்வகையில் அப்போல்லோ மருத்துவமனையில் இன்று முன்னாள் பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். "ஏன் தலைவரே உங்க கட்சியை சேர்ந்தவர்கள் சாணிக் கரைசல், மாட்டு கோமியம் தான் பலன் தரும் என பேசியதை மறந்துட்டு, கொரோனாவிற்கு தடுப்பூசிதான் தீர்வு என உணர்ந்துவிட்டிற்களா?" என கேள்வி எழுப்பி நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Also Read: “தடுப்பூசி சேவையை எக்காரணம் கொண்டும் வர்த்தக நோக்கில் அணுகக்கூடாது” : தினகரன் தலையங்கம் வலியுறுத்தல்!