Tamilnadu
மோடி - எடப்பாடி ஆட்சியில் கைவிடப்பட்ட விவசாயிகள் : கடன் தொல்லையால் விபரீத முடிவெடுத்த விவசாயி !
கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே பெத்தேல்புரம் கூட்டுவிளைவு பகுதியைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவர் நெய்யூர், புத்தேரி ஆகிய பகுதியில் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து வாழை விவசாயம் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாழை விவசாயத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடன் வாங்கி மீண்டும் வாழை பயிரிட்டுள்ளார். இதுவும் சின்னதம்பிக்கு லாபத்தைக் கொடுக்காமல் நஷ்டத்தையே ஏற்படுத்தியது. இதனால் கடனிலிருந்து மீளமுடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் அருகில் உள்ள கால்வாயில் குளித்து விட்டு வருவதாக வீட்டாரிடம் சொல்லிவிட்டு சென்றுள்ளார். மாலைநேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு வராததையடுத்து உறவினர்கள் பல இடங்களில் தேடிப்பார்த்துள்ளனர். ஆனால், சின்னத்தம்பி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை,
இதையடுத்து, நேற்று காலையில் சின்னத்தம்பி அப்பகுதியில் உள்ள, பெற்றோரின் கல்லறை அருகில் இறந்து கிடப்பதைக் கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி குளச்சல் போலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் சின்னத்தம்பியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இது குறித்து போலிஸார் நடத்திய விசாரணையில், வாழை விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் சின்னத்தம்பி விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரியவந்தது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
“‘அமித்ஷாவே சரணம்’ என்று சரண்டர் ஆகிவிட்டார் பழனிசாமி!” : தமிழ்நாட்டு துரோகிகளுக்கு முதலமைச்சர் கண்டனம்!
-
“தலைமுறை தலைமுறையாக போராடி பெற்ற உரிமைகளை, நாமே பறிபோக அனுமதிக்கலாமா?” : கரூரில் முதலமைச்சர் எழுச்சியுரை!
-
“திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்தது; தமிழ்நாட்டிற்கான வழி திறந்தது!” : கனிமொழி எம்.பி திட்டவட்டம்!
-
”திமுக-வை எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனல் பேச்சு!
-
தி.மு.க முப்பெரும் விழா : கனிமொழி MP-க்கு பெரியார் விருது வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!