Tamilnadu
சீர்கெட்டு கிடக்கும் கே.வி.குப்பம் சுகாதார நிலையம்.. கமிஷனுக்காக மக்கள் நலனில் கோட்டைவிட்ட அதிமுக அரசு!
இந்தியாவிலேயே சுகாதாரத்துறையில் சிறந்து விளங்கியதற்காக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசுக்கு மத்திய பாஜக அரசு கடந்த ஆண்டு விருது வழங்கி கவுரவித்தது. ஆனால் அந்த விருதை பெறுவதற்கான எவ்வித அருகதையும் அற்றதுதான் இந்த பழனிசாமி அரசு. அதற்கு உதாரணமாக பல்வேறு காரணங்கள் உள்ளது.
அதன்படி, வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதியை அடுத்த வடுகன்தாங்கலில் உள்ள சுகாதார நிலையம் நீண்ட நாட்களாக உரிய முறையில் பராமரிக்கப்படாமல் சுகாதார சீர்கெட்டு உள்ளது.
வடுகன் தாங்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள 15 கி.மீ மக்களுக்குமான சுகாதார தேவையை பூர்த்தி செய்யும் நிலையாமாக இது இருந்து வருகிறது. சுமார் 50க்கும் மேற்பட்ட படுக்கை வசதியுடன் செயல்படுகிறது. ஆனால், அங்கு அடிப்படை வசதியான கழிவறை கூட சுத்தமாக இல்லாததால் பயனாளிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
அதுபோக, ஒரே ஒரு செவிலியர் மட்டுமே பெரும்பாலான சமயங்களில் சிகிச்சை அளித்து வருகிறார். மேலும் இந்த சுகாதார நிலையத்துக்கான ஆம்புலன்ஸும் 2 ஆண்டுகளாக ஒரே இடத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆகையால், இதனை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என வடுகன் தாங்கல் மக்கள் பல நாட்களாக கோரி வருகின்றனர்.
பல லட்சம் கணக்கில் கட்டிய கட்டங்களை பராமரிக்காமல் அதற்கான பணியாளர்களை பணியமர்த்தாமல் கணக்கு காண்பித்து கமிஷன் அடிப்பதையே குறிக்கோளாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் பழனிசாமி தலமையிலான அதிமுக அரசு தேர்தல் நெருங்கும் வேளையில் மினி க்ளினிக் அமைப்பதாக பூசல் நாடகம் நடத்தி வெற்றிநடை போடும் தமிழகம் என பொய் பிரசாரம் செய்து வருகிறது.
Also Read
-
மீண்டும் அதிகாரப் போட்டி... தொடரும் கோஷ்டி மோதல்கள் – அதிமுகவின் உட்கட்சி மோதல் வரலாறு!
-
“விஜய்க்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தி.மு.க தலைவர் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்! : ஆரத்தழுவி வரவேற்ற மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க.வின் 107 எம்.எல்.ஏ.க்களில் 41 பேர் மீது வழக்கு : வெளியான அதிர்ச்சி ஆய்வறிக்கை!
-
மறந்துட்டியா..?! - வெற்றி சான்றிதழை மறந்த தவெக பெண் அமைச்சர்.. பதவியேற்காமல் அனுப்பி வைக்கப்பட்ட சோகம்!