Tamilnadu
“மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள்” : தியாகி அரங்கநாதன் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை !
மொழிப்போர் தியாகிகள் தியாகிகளின் வீர வணக்க நாளையொட்டி சென்னை விருகம்பாக்கத்திலுள்ள தியாகிகளின் ஒய். அரங்கநாதன் நினைவிடத்திற்கு தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கழக நிர்வாகிகளுடன் பேரணியாகச் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
தமிழகத்தில் இந்தி மொழி திணிப்புக்கு எதிராக நீண்ட நெடிய போராட்டங்கள் நடந்தன. போராட்டத்தில் ஈடுபட்டு கைதானவர்களில் சிலர் சிறைக் கொடுமை தாங்காமல் உயிரிழந்தனர். ஜனவரி 25 1965ம் ஆண்டு முதல் மொழிப் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி 25ம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
இதையொட்டி, சென்னை விருகம்பாக்கம் காளியம்மன் கோயில் தெருவில் இருந்து சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தி.மு.கவினர், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஊர்வலமாகச் சென்று ஒய்.அரங்கநாதன் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அதே பகுதியில் உள்ள அரங்கநாதன் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது மனைவி மல்லிகா அரங்கநாதன் மற்றும் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
ஊர்வலத்தில் சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சுப்ரமண்யம் சுப்ரமண்யம் எம்.எல்.ஏ, கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அரவிந்த் ரமேஷ் எம்.எல்.ஏ, தாயகம் கவி எம்.எல்.ஏ, ஆர்.டி அரசு எம்.எல்.ஏ, மாநில இளைஞரணி துணை செயலாளர் ஜோயல், தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகரன், பகுதி செயலாளர் ராஜா, கண்ணன், இளைஞரணி அமைப்பாளர் பிரபாகர் ராஜா உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Also Read
-
“பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர்” -சேந்தமங்கலம் திமுக MLA மறைவுக்கு முதல்வர் இரங்கல்!
-
இன்னும் எத்தனை நாட்களுக்கு மழை பெய்யும் : வானிலை நிலவரம் இதோ!
-
“களத்தில் இறங்கி மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்திடுவோம்!” : துணை முதலமைச்சர் அறிவுறுத்தல்!
-
சேந்தமங்கலம் திமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி காலமானார்...
-
வடகிழக்கு பருவமழை... சென்னை மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? - விவரம் உள்ளே!