Tamilnadu
மோடி - எடப்பாடி ஆட்சியில் முடங்கிய வாழ்வாதாரம் : கடன், நஷ்டத்தால் கட்டிட கலை வல்லுனர் தூக்கிட்டு தற்கொலை!
மத்தியில் ஆட்சி செய்யும் மோடி அரசு மற்றும் மாநிலத்தில் ஆட்சி செய்யும் எடப்பாடி அரசின் நிர்வாகத் திறமையின்மைக் காரணமாக நாட்டில் சிறு-குறு தொழில் செய்பவர்களின் நிலைமை படுமோசமாக மறியுள்ளது.
குறிப்பாக வங்கிகளில் கடன் வாங்கி தொழில் நடத்தினாலும் லாபம் அடையமுடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் சிறு தொழில் செய்துவந்தவர்கள் தினசரி கூலி வேலைக்கும் சென்று வாழ்வாதரத்தை நகர்த்தி வருகின்றனர்.
மேலும் இதில் தொழில் நஷ்டத்தாலும் குடும்ப வருமானத்தை சமாளிக்க முடியாமலும் பலரும் கடந்த காலங்களில் உயிரிழந்துள்ளனர். அப்படி, தொழில் சரிவால் ஏற்பட்ட நெருக்கடியாலும், கொரோனாவால் வேலை இழந்த நிலையிலும், வங்கி அதிகாரிகள் கடனை செலுத்த நெருக்கடி கொடுத்ததால் கட்டிட கலை வல்லுனர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அஸ்தினாபுரம் மாணிக்கம் நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (39). இவர் தனியார் கட்டிட நிறுவனத்தில் கட்டிட கலை வல்லுநராகவேலைப்பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், கொரோனா காரணமாக கடந்த 8 மாதங்களாக வேலை இல்லாமல் வீட்டில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இவர் சுயதொழில் தொடங்குவதற்காக வங்கிகளில் இருந்து 28 லட்சம் வரை கடன் பெற்று இருந்துள்ளார். இந்நிலையில், கொரோனாவால் வேலை பறிப்போனநிலையில், வாங்கிய கடனை கட்டமுடியாமல் திணறி வந்துள்ளார்.
இதனையடுத்து கடன் கொடுத்த வங்கி நிர்வாகம் தொடர்ந்து கடனை கட்ட செந்திலுக்கு அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த செந்தில் வீட்டில் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.
பின்னர் அவரது உடலை கைப்பற்றிய சிட்லபாக்கம் போலிஸார் கைபற்றி உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.
Also Read
-
“மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்களை அதிகரிக்க வேண்டும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
"அரசியல் செய்யும் மதுரை ஆதீனம், மட விவகாரங்களில் இருந்து விலக வேண்டும்" - இளைய ஆதினம் புகார் !
-
ரூ.3,201 கோடி முதலீட்டில் 6,250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் MoU!
-
சென்னையில் நாளை 13 இடங்களில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் : இடங்கள் குறித்த விவரம் உள்ளே !
-
”இளைஞர்களின் வெற்றியை உறுதி செய்திடுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!