Tamilnadu

“மின்சாரத்துறையின் நிர்வாக சீர்கேட்டால் தொடரும் உயிர்பலி”: ஒரே மாதத்தில் மின் விபத்துகளினால் 15 பேர் பலி!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மின் கம்பிகள் அறுந்து விழுந்தும், மின்கம்பங்களில் மின்சாரம் பாய்ந்தும் பலர் உயிரிழந்து வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் எடப்பாடி அரசின் மின்சாரத்துறையில் நிலவிவரும் நிர்வாக சீர்கேடு காரணமாக இத்தகைய மின் விபத்துகளில் மனிதர்கள் மற்றும் கால்நடைகள் சிக்கி உயிரிழப்பது தொடர்கதையாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறிப்பாக மின்சாரத்துறையின் அலட்சியம் மற்றும் போதிய பராமரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளாததன் விளைவு, கடந்த மாதத்தில் ஒருமாதத்தில் மட்டும் 15 பேர் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

குறிப்பாக, கடந்த 12ம் தேதி தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே வரகூரில் பேருந்தில் மின்சாரம் தாக்கி 5 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, தற்போது புதுக்கோட்டையில் மின்சாரம் தாக்கி அண்ணன், தங்கை ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

புதுக்கோட்டை அய்யனார்புரம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது வீட்டு மாடியில் தாழ்வாக சென்ற மின்கம்பி சென்று கொண்டுள்ளது. இந்நிலையில், நேற்று இரவு, 9.30 மணியளவில் இவரது மகன் தமிழரசன் (23) மற்றும் இவரது மகள் பார்கவி (22) ஆகிய இருவரும் மாடிக்கு சென்றபோது தாழ்வாக இருந்த மின்கம்பி உரசி மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இருவரின் அலறல் சத்தம் கேட்ட தாய் கோப்பெருந்தேவி மாடிக்கு சென்றபோது, மின்சாரம் தாக்கி தூக்கி வீசி எறியப்பட்டார். ஆனால், அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. இதனையடுத்து உயிரிழந்த பார்கவியை கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

தமிழரசன் கோவையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இது குறித்து, புதுக்கோட்டை கணேஷ் நகர் போலிஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். மிசாரத்துறையில் நடக்கும் ஊழல் மற்றும் போதிய பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளாததே இத்தகைய விபத்திற்கு காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Also Read: பேருந்தில் மின்சாரக் கம்பி உரசி 5 பேர் பலி: “அ.திமுக அரசின் நிர்வாக சீர்கேட்டால் விபத்து” - நடந்தது என்ன?