Tamilnadu
சென்னையில் காரில் சுற்றியபடியே கஞ்சா விற்பனை.. வசமாக சிக்கிய மொத்த வியாபாரி..20 கிலோ கஞ்சா பறிமுதல்!
சென்னை முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு கஞ்சா தேவைப்படுபவர்களுக்கு காரிலேயே கொண்டு சென்று விற்பனை செய்து வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் காலை 11 மணியளவில் ஒரு நபர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் மயிலாப்பூர் தனிப்படை போலீசார் கீழ்பாக்கம் சென்று சந்தேகத்திற்கு இடமாக அங்கு சுற்றி திரிந்த ஒரு நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த நபர் நெற்குன்றம், வடுவை அம்மன் நகர் பகுதியை சேர்ந்த சசிகுமார் என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் தனிப்படை போலீசார் 4 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். அதனைத் தொடர்ந்து போலீசார் சசிகுமாரிடம் மேற்கொண்ட விசாரணையில் ஆந்திர மாநிலத்தில் கோபால் என்பவரிடமிருந்து கஞ்சாவை பெற்று சென்னையில் கடத்திக் கொண்டு வந்து பிரபல கஞ்சா வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
மேலும் சேத்துப்பட்டு, மகாலிங்கபுரம் பகுதியை சேர்ந்த பிரபல கஞ்சா வியாபாரி தங்கையா என்பவருக்கு கஞ்சா விற்பனை செய்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு காவல் துறை இயக்குனர் அலுவலகம் எதிரே அமைந்துள்ள காந்தி சிலை அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த தங்கையாவை போலீசார் கைது செய்தனர்.
தங்கையாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆந்திராவிலிருந்து கடத்திக் கொண்டு வரப்பட்ட 16 கிலோ கஞ்சாவை வாங்கி சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வரும் நபர்களுக்கு விற்பனை செய்து வந்ததாகவும் அதேபோல் கஞ்சா தேவையான தெரியப்படுத்துவர்களுக்கு தனது காரிலேயே கொண்டு சென்று கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
பின்னர் இருவரையும் கைது செய்து போலீசார் அவர்களிடமிருந்து 20 கிலோ கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்தி வந்த காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கஞ்சா அனுப்பிய கோபால் என்பவரை கைது செய்வதற்காக காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு காவல் துறை இயக்குநர் அலுவலகம் எதிரிலேயே கஞ்சா விற்பனை செய்து வந்ததால் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சி நிலவி வருகிறது.
Also Read
-
162 அடுக்குமாடி குடியிருப்பு முதல் பெண்களுக்கான Gym வரை... கொளத்தூரில் இடைவிடாது சுற்றி சுழன்ற முதல்வர்!
-
கொளத்தூரில் முதலமைச்சர் சிறுவிளையாட்டரங்கம் : 2 இறகுப்பந்து ஆடுகளங்கள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் என்ன?
-
விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு 3% இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு வேலைவாய்ப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?
-
2,429 பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நாளை விரிவாக்கம் : 3.6 லட்சம் மாணவர்கள் பயன்!
-
முதலமைச்சரின் உதவி மையம் : திடீரென ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!