Tamilnadu

“உலகிலேயே மிகவும் குறைவான எடையில் சாட்டிலைட் கண்டுபிடித்து தஞ்சை மாணவன் சாதனை” : குவியும் பாராட்டுக்கள்!

தஞ்சையைச் சேர்ந்த ரியாஸ்தீன் என்கிற 18வயது மாணவர் கண்டுபிடித்துள்ள உலகிலேயே மிகவும் எடைக் குறைவான இரண்டு சாட்டிலைட் அமெரிக்காவில் உள்ள நாசாவிலிருந்து 2021ல் விண்ணில் ஏவப்படவுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த I DOOLE LEARNING நிறுவனம் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவுடன் இணைந்து cubes in Space என்று புதிய கண்டுப்பிடிப்புகளுக்கான போட்டியை ஆண்டுதோறும் நடத்தும்.

இதில் கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் 73 நாடுகளிலிருந்து கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான மாணவர்களின் கண்டுபிடிப்புகளிலிருந்து ரியாஸ்தீன் சாட்டிலைட் விண்ணில் ஏவுவதற்கு தேர்வு செய்யப்பட்டது, Vision Sat-VI மற்றும் ஏ2 என்று பெயரிடப்பட்டுள்ள இரு சாட்டிலைட்டுகளும் உயரம் 37 மி.மீ மற்றும் 32 கிராம் எடையுடையது. இரு சாட்டிலைட்டுகளும் உலகிலேயே மிகவும் எடை குறைவான செயற்கைக் கோளாகும்.

இரு சாட்டிலைட்டுகளும் தொழில் நுட்ப சோதனை செயற்கைக் கோள்கள். இரு சாட்டிலைட்டுகளிலும் 11 சென்சார்கள் உள்ளன. அதன் மூலம் 17 Parameter கண்டறிய முடியும். இதற்கான ஆராய்ச்சியை முடிக்க 2வருடங்கள் எடுத்துக்கொண்ட மாணவன் ரியாஸ்தீனுக்கு சென்னையைச் சேர்ந்த INRO LAB என்கிற தனியார் நிறுவனம் உதவியுள்ளது.

சென்னை ஆதம்பாக்கம் தனியார் பள்ளியில் படிக்கும் போதே ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறான். தற்போது தஞ்சை அருகே உள்ள தனியார் பல்கலைக் கழகத்தில் பி.டெக். இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

Also Read: “மிரட்டல்களால் திமுகவைத் தடுக்க முடியாது; தடைகளை உடைத்து மக்கள் சந்திப்பு தொடரும்”: மு.க.ஸ்டாலின் உறுதி!