Tamilnadu
“அதிமுகவை நிராகரிப்போம் எனத் தமிழகம் தயாராகிவிட்டது; தமிழகம் மீளும்”: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று (23-12-2020) காலை, காஞ்சிபுரம் மாவட்டம் - திருப்பெரும்புதூர் தொகுதியில் உள்ள குன்னம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்றார்.
அதுபோது, தமிழகத்தைக் கடந்த பத்து ஆண்டுகளாகச் சீரழித்த அ.தி.மு.க. அரசின் ஊழல்களைப் பட்டியலிட்டுக் குற்றப்பத்திரிகையைப் பொதுமக்களிடம் வழங்கினார். பின்னர், கிராமசபைக் கூட்டத்தில் அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், இதுகுறித்துத் தனது முகநூல் பக்கத்தில்தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “பத்து நாட்களில் 16,500 கிராமங்களில் கிராமசபை/வார்டு கூட்டங்களை திமுக நடத்துகிறது. இன்று, திருப்பெரும்புதூர் தொகுதியின் குன்னம் ஊராட்சியில் கலந்து கொண்டேன்!
அ.தி.மு.க.வை நிராகரிப்போம் (#WeRejectADMK) எனத் தமிழகம் தயாராகிவிட்டது. கலந்துகொண்ட ஒவ்வொருவரின் ஆதரவிலும் இதைப் புரிந்துகொள்ள முடிகிறது! தமிழகம் மீளும்!” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலகப் புத்தொழில் மாநாடு - 2025 மகத்தான வெற்றி : ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!
-
தீபாவளி பண்டிகை : சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் - கிளாம்பாக்கத்தில் ஆய்வு செய்த அமைச்சர் சிவசங்கர்!
-
இதற்கெல்லாம் பதில் வருமா? : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு கேள்வி எழுப்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
தீபாவளிக்கு அடுத்தநாள் பொதுவிடுமுறையா? : தமிழ்நாடு அரசின் அறிவிப்பு என்ன?