Tamilnadu

கொரோனா ஊரடங்கால் முடங்கிய வாழ்வாதாரம்... கடன் தொல்லையால் பெண் தற்கொலை!

பம்மல் அருகே கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் கடன் தொல்லை காரணமாக பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏறபடுத்தியுள்ளது.

சென்னை தாம்பரத்தை அடுத்த பம்மல் சங்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுதர்சன். இவர் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி புவனேஸ்வரி (38).

கொரோனா தொற்று அச்சுறுத்தல் - அரசால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக இவர்களது வியாபாரத்தில் கடும் நஷ்டம் ஏற்பட்டு 8 லட்சம் ரூபாய் வரை கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்பக் கேட்டு தொல்லை கொடுத்துள்ளனர்.

இதனால் மன உளைச்சலில் இருந்த புவனேஸ்வரி கணவர் குளிக்கச்சென்ற நேரத்தில் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அறையில் தூக்கில் பிணமாகத் தொங்கிய நிலையில் மனைவியைக் கண்ட சுதர்சன் அதிர்ச்சியடைந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சங்கர் நகர் போலிஸார், புவனேஸ்வரியின் உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து கணவரிடம் விசாரித்து வருகின்றனர்.