Tamilnadu
அரசாணை, சுற்றறிக்கைகளை தொன்மையான தமிழ் மொழியில் வெளியிட்டால் என்ன? தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்!
சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த பழனி என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழகத்தில் முதல் மொழியாக தமிழையும், இரண்டாம் மொழியாக ஆங்கிலமும் என இரட்டை மொழி கொள்கை பின்பற்றப் பட்ட போதும், தொன்மையான தமிழ்மொழி, அரசு அதிகாரிகளால் புறக்கணிக்கப்படுவதாக குற்றம்சாட்டி உள்ளார்.
அரசின் உத்தரவுகள், அரசாணைகள், சுற்றறிக்கை, கடிதங்கள் ஆகியன ஆங்கிலத்திலேயே தயாரிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்படுவதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
சட்ட மன்றத்தில் நிதிநிலை அறிக்கை உள்ளிட்ட அறிக்கைகள் தமிழில் தயாரிக்கப்பட்டு உறுப்பினர்களுக்கு வழங்கும் நிலையில், அதே நடைமுறையை அரசாணைகள், சுற்றறிக்கைகள், கடிதங்களை தயாரிக்கும்போது பின்பற்றுவதில் எந்த சிக்கலும் இல்லை என்றும் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழக டிஜிபி, காவல் துறை அதிகாரிகளுக்கு பிறப்பித்த உத்தரவில், கடிதங்களை தமிழில் அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டுள்ளதையும் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசுக்கு தான் அனுப்பிய மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால், தனது மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் பொங்கியப்பன் அடங்கிய அமர்வு மனுவுக்கு மார்ச் 29ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி தமிழக தலைமைச் செயலாளர், தமிழ் வளர்ச்சி துறை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது.
Also Read
-
“Climate Action, Clean Energy ஆகிய இலக்குகளில் தமிழ்நாடு முதலிடம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
பீகாரில் மகளிர் திட்டத்தில் முறைகேடு : ஆண்களின் வங்கி கணக்தில் வரவு வைக்கப்பட்ட பணம்!
-
விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதை தடுக்க நடவடிக்கை என்ன? : நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய திமுக எம்.பி!
-
மாதவிடாய் சுகாதாரத் திட்டம் பயன் தருகிறதா? : ஒன்றிய அரசுக்கு தி.மு.க MP கேள்வி!
-
“GST நஷ்டத்திற்கு இழப்பீடு வேண்டும்” : நாடாளுமன்றத்தில் ராஜேஷ்குமார் MP வலியுறுத்தல்!