Tamilnadu
இரவில் உருட்டு கட்டைகளோடு சுற்றி திரியும் மர்ம கும்பல்: முதல்வர் மாவட்டத்தில் தொடரும் குற்றச் சம்பவங்கள்!
சேலம் மாநகரம் கருங்கல்பட்டி தொட்டன செட்டி காடு என்ற பகுதியில் நேற்று இரவு தெரு நாய்கள் நீண்ட நேரம் குலைத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் சந்தேகமடைந்த அப்பகுதியை சேர்ந்த சிலர் தங்கள் வீடுகளில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தபோது, ஐந்து பேர் கொண்ட கும்பல் கைகளில் உருட்டுக் கட்டைகளுடன் வீதிவீதியாக சுற்றித் திரிந்தது தெரியவந்தது.
மேலும் ஒரு சில வீடுகளின் கதவுகள் திறந்து உள்ளதா என்பது குறித்தும் அந்த கும்பல் பார்த்ததாக தெரியவருகிறது. வீதிவீதியாக அந்த கும்பல் நீண்ட நேரம் சுற்றி வந்ததை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து இந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.
நள்ளிரவில் வீதிவீதியாக சுற்றித்திரியும் இந்த மர்ம கும்பல், கொள்ளை கும்பலா அல்லது யாரேனும் தாக்குவதற்கு திட்டமிட்டு வந்த கும்பலா என்பது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்றும் தங்கள் பகுதியில் இரவு நேரத்தில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில், இதையே கருங்கல்பட்டி பகுதியில் உள்ள மூங்கபாடி தெருவில் உள்ள ஒரு வீட்டில் பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே இந்த கும்பல் வீடுகளில் கொள்ளையடிக்க வந்த கும்பலா என்ற அச்சம் பொதுமக்கள் இடையே நிலவி வருகிறது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த மாவட்டத்திலேயே தொடர்ந்து சட்டம் ஒழுங்கு மீறப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
Also Read
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?
-
சென்னை, தரமணியில் தமிழ் அறிவு வளாகம் : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.52 கோடி செலவில் 208 புதிய நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் - திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அஜித் குமார் மரணம் விவகாரம்: “Sorry மா.. ஒரு 'அப்பாவாக.. ஒரே Phone Call!” - அமைச்சர் TRB ராஜா நெகிழ்ச்சி!