Tamilnadu
“அ.தி.மு.க அரசால் தொடரும் உயிர்பலி” : திறந்த பாதாள சாக்கடைகளை மூடாததால் சென்னையில் மீண்டும் ஒருவர் பலி!
சென்னையில் பெய்த கனமழையின் போது, சாலைகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்றுவதற்காக சாலைகள் நடுவிலும், ஓரத்தில் அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால் கால்வாய் மற்றும் பாதாள சாக்கடை மூடிகளை மாநகராட்சி நிர்வாகம் திறந்திவிட்டிருந்தது.
இந்நிலையில், மழைநீர் தேங்கி இருக்கும் இடங்களில், தூர்வாரும் பணியை செய்யாமல், பல இடங்களில் மழைநீர் வடிகால் கால்வாய் மற்றும் பாதாள சாக்கடை மூடிகள் திறந்த படியே போட்டுள்ளனர். இதனால் பல இடங்களில் வாகன விபத்து, உயிர்பழி கூட நடந்துள்ளது.
குறிப்பாக, நேற்றைய தினம் மதுரவாயல் பைபாஸ் வழியாக பைக்கில் சென்ற தாய் மற்றும் மகள் இருவரும் சாலையில் இருந்த மழைநீர் வடிகால் கால்வாயிலில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நடந்த 24 மணி நேரத்திலேயே சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்தவர் நரசிம்மன் என்பவர் பாதாள சாக்கடை குழிக்குள்விழுந்து பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்தவர் நரசிம்மன், ஓட்டுனராக பணியாற்றி வந்துள்ளார். இன்று காலை பணிக்கு நடந்து சென்றபோது, கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் தேங்கியிருந்த மழை நீரை சென்றபோது திறந்திருந்த பாதாள சாக்கடை தெரியாததால் தவறி விழுந்து நரசிம்மன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பாக அருகில் இருந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைத்து பரிசோதித்துப் பார்த்தபோது நரசிம்மன் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. நுங்கம்பாக்கம் காவல் துறையினர் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து அந்த பகுதியில் மழை நேரங்களில் இதுபோன்ற விபத்து ஏற்படுவதாகவும் பலமுறை மாநகராட்சியில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் நரசிம்மன் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கும் அப்பகுதி மக்கள், உயிர் இழப்புக்கு பின்னரே மாநகராட்சி அதிகாரிகள் மழைநீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
Also Read
-
சென்னை ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜானிஸ் ஜென்... கோப்பை வழங்கி முதலமைச்சர் பாராட்டு !
-
"SIR உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான தந்திரம் மட்டுமே" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !
-
“S.I.R-க்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பது அனைத்துக் கட்சிகளின் கடமை!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உச்சநீதிமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் வழக்கு தாக்கல் செய்யும்!: அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்!
-
SIR விவகாரம் : முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்... 40 கட்சிகள் பங்கேற்பு! - விவரம்!