Tamilnadu
சென்னையில் வருமான வரித்துறை அதிகாரியின் கார் மோதி கர்ப்பிணி பெண் உயிரிழப்பு!
வருமான வரித்துறை அதிகாரியின் கார் மோதி கர்ப்பிணிப் பெண் உயிரிழந்துள்ளார். சென்னை வில்லிவாக்கம் ரங்கதாஸ் காலனி பகுதியைச் சேர்ந்தவர் கௌசிபி (26). இவரது கணவர் துணிக்கடையில் பணிபுரிந்து வருகிறார்.
4 மாத கர்ப்பிணியான கௌசிபி மருத்துவமனைக்குச் சென்று ஸ்கேன் எடுத்தபிறகு கணவரிடம் காட்டிவிட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது பின்னால் வந்த கார் மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.
விபத்து ஏற்படுத்திய காரில் பயணம் செய்த பெண் உடனடியாகத் தப்பிச் சென்றுள்ளார். விபத்து ஏற்படுத்திய கார் வருமான வரித்துறை அதிகாரியுடையது எனத் தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்தில் திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலிஸார் மற்றும் ராஜமங்கலம் போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கார் மோதி கர்ப்பிணிப் பெண் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
அமெரிக்க வரியால் பாதிக்கப்படும் திருப்பூர்... பிரதமர் அவசர நடவடிக்கை எடுக்கவேண்டும்: திருப்பூர் MP கடிதம்
-
நீலக்கொடி சான்றிதழ் பெற அழகுபடுத்தப்படும் தமிழ்நாட்டின் 6 கடற்கரைகள்: ரூ.24 கோடி ஒதுக்கிய தமிழ்நாடு அரசு!
-
“இந்திய மக்களுக்கு நீதி கிடைக்கும்! ஜனநாயகம் தழைக்கும்!”: பீகாரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுச்சி உரை!
-
வாக்கு திருட்டு - பீகாரில் ராகுல் காந்தியுடன் கைகோர்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
நடிகர் விஜய் மீது வழக்குப் பதிவு : த.வெ.க தொண்டர் காவல்துறையில் கொடுத்த புகார் என்ன?