Tamilnadu
நிவர் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ‘களத்தில் நிற்கும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்’ ! (Photos)
நிவர் புயலின் காரணமாக கடந்த 3 தினங்களாக கடலோர மாவட்டம் மற்றும் சென்னை நகர் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாத சூழலில் அவர்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்பு அடைந்துள்ளது.
குறிப்பாக, மழை நீர் வடிகால் இல்லாத பகுதிகள், தாழ்வான பகுதிகளில் சாலைகள், குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனிடயே மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தி.மு.கவினர் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும் என்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில் நேற்று காலை வடசென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட சூளை, பெரம்பூர், திருவிகநகர், கொளத்தூர் பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கினார்.
இந்நிலையில், தி.மு.க தலைவரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், நிவர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் இரண்டாம் நாளாக தனது ஆய்வு பணியைத் தொடர்ந்தார். அதன்படி, சென்னை சைதாப்பேட்டையில் வெள்ள பாதிப்புகளை மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து கே.கே.நகர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் சென்று வெள்ள பாதிப்புகளை பார்வையிட உள்ளார்.
முன்னதாக சைதாப்பேட்டையில் ஆய்வு பணி மேற்கொள்ளும்போது, அங்கு நிவாரண முகாமில் இருந்த மக்களிடம் குறைகளை கேட்டறிந்த மு.க.ஸ்டாலின், பாதிக்கப்பட்டவர்களுக்கு போர்வை, ரொட்டி, உணவு உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார். அப்பகுதி தி.மு.க நிர்வாகிகளிடம் நிவாரணப் பணிகள் குறித்துக் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வு பணியின் போது தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுடன் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்க பாண்டியன், எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன் உடனிருந்தனர். ஆளும் கட்சியினர் யாரும் தேவையான உதவிகளை செய்யாத நிலையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் களத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருவதற்கு, சமுக வலைதளங்களில் பலரும் பாராட்டுகளை தெரிவித்துவருகின்றனர்.
Also Read
-
“பட்டியலின மக்களுக்கான நிதியை பயன்படுத்தாதது ஏன்?” : மக்களவையில் ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“மாம்பழ கூழுக்கு 12% ஜிஎஸ்டி வரி என்பது அநியாயம்!” : திமுக எம்.பி. பி.வில்சன் குற்றச்சாட்டு!
-
சென்னை கோயம்பேடு - பட்டாபிராம் இடையேயான மெட்ரோ ரயில்! : தமிழ்நாடு அரசிடம் திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு!
-
ஒன்றிய பா.ஜ.க ஆட்சியில் கடன் மதிப்பு ரூ.200 லட்சம் கோடியாக உயர்வு! : வெளியான அதிர்ச்சி தகவல்!
-
மின்கழிவுகள் மூலம் ஈட்டிய GST தொகை எவ்வளவு? : நாடாளுமன்றத்தில் திருச்சி சிவா MP கேள்வி!