Tamilnadu

அ.தி.மு.க அரசின் அலட்சியம்.. 10,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசம் : செங்கல்பட்டு விவசாயிகள் வேதனை!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள வில்வராயநல்லூர் அரசு கிடங்கில் போதுமான இடம் இல்லாததால் அரசு கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை திறந்தவெளியில் சேமித்து வைத்துள்ளனர் இதில் சுமார் 10,000 மேற்பட்ட நெல் மூட்டைகள் நனைந்து நாசமாகி உள்ளன.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட கிராமத்தில் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தை திறந்து விவசாயத்திலிருந்து அரசு நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டன. அவற்றை பல்வேறு இடங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் கிடங்குகளில் சேமித்து வைக்கும்.

ஆனால், அரசுக்கு போதுமான இடவசதி இல்லாததால் வில்வராயநல்லூரில் அரசுக்கு சொந்தமான கிடங்கின் எதிரில் திறந்தவெளி மைதானத்தில் நெல் மூட்டைகளை அடுக்கி சேமித்து வைத்துள்ளனர். இதற்கு உரிய பாதுகாப்பான முறையில் தார்பாய் களைக் கொண்டு மூடாமல் இருப்பதால் இப்போது பெய்துள்ள மழையால் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மூட்டைகள் மழை நீரில் நனைந்து நாசமாகி உள்ளன இவற்றின் மதிப்பு சுமார் ரூபாய் 50 இலட்சத்திற்கும் மேலாகும்.

Also Read: “சூரப்பாவை தற்காலிகப் பணிநீக்கம் செய்யாமல் இருப்பது ஏன்?; திரைமறைவுப் பேரம் என்ன?”: மு.க.ஸ்டாலின் கேள்வி!