Tamilnadu

“பொது முடக்கத்திலும் முடங்காத சேவை” : 1,200 தூய்மைப் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கி தி.மு.க MLA மரியாதை!

உலகளவில் கொரோனா எனும் கொடிய வைரஸ் கோரத் தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தங்கள் பணியைத் தொய்வில்லாமல் செய்து வருகின்றனர் தூய்மைப் பணியாளர்கள்.

சேவை எண்ணத்துடன் பணியில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களை “corona warriors” என்று அரசு கொண்டாடியது. மருத்துவர்களுக்கு அடுத்து நோய்க் கிருமிகளுடன் நேரடியாகப் போராடுவது இந்தத் தூய்மைப் பணியாளர்கள்தான்.

இந்த நிலையிலும் உயிரை பணயம் வைத்து வேலை செய்த தூய்மைப் பணியாளர்களை பாராட்டி தி.மு.க எம்.எல்.ஏ மரியாதை செய்த சம்பவம் அவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் கொரோனா தொற்று காலத்தில் களப்பணி ஆற்றிய தூய்மைப் பணியாளர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக, இராஜபாளையம் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் மற்றும் இராஜபாளையம் தி.மு.க யூனியன் சேர்மன் சிங்கராஜ் ஆகியோர் இராஜபாளையம் பகுதியில் உள்ள 1,200 துப்புரவு பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாலை, சால்வை அணிவித்து புத்தாடை மற்றும் இனிப்புகள் வழங்கினார் சிறப்பித்தார்.

அப்போது பேசிய தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன், தீபாவளி திருநாளை முன்னிட்டு அனைவருக்கும் புத்தாடை மற்றும் இனிப்புகள் வழங்குவதில் பெருமை அடைவதாகவும் இவர்கள் களப்பணிகள் தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடிந்தது அனைவரும் வீட்டில் முடங்கி இருந்த காலத்தில் இவர்கள் களத்தில் இறங்கி பணியாற்றியதால் பெரும் பாதிப்பு குறைக்கப்பட்டது. ஆகையால் இவர்களை கௌரவிப்பது மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் ராஜபாளையம் தி.மு.க நகர செயலாளர் ராமமூர்த்தி மகளிர் அணி அமைப்பாளர் சுமதி மாணவரணி அமைப்பாளர் வேல்முருகன் பேரூர் கழக செயலாளர் சிங்கம்புலி அண்ணாவி ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Also Read: “உயிரை பணயம் வைத்து செய்த வேலைக்கு சம்பளம் இல்லை” : அதிமுக அரசை கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!