Tamilnadu
“திருட்டு பொருட்கள் விற்பதாக வெளியான தகவலால் வாழ்வாதாரமே சிதைந்துவிட்டது”: பர்மா பஜார் வியாபாரிகள் வேதனை!
பர்மா தமிழர் மறுமலர்ச்சி சங்கம் சார்பில் சென்னை பத்தரிகையாளர் மன்றத்தில் இன்று செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் அப்துல் ரஹ்மான் பேசுகையில், பர்மா பஜார் துவங்கப்பட்டு 53 ஆண்டுகள் ஆகிவிட்டது. கடந்த காலங்களில், சுற்றுலாத் தளங்களாக விளங்கும் மெரினா, மகாபலிபுரம் போல பர்மா பஜாரிலும் மக்கள் கூட்டம் அதிகளவில் வருகை தந்ததால் வியாபாரம் நல்ல முறையில் நடைபெற்றது.
ஆனால், தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியால் எல்லா இடங்களிலும் எல்லா பொருட்களும் எளிய முறையில் கிடைக்கின்றன. எனவே வாடிக்கையாளர்களின் வருகை குறைந்து வருவதினாலும், பொருளாதார பாதிப்படையும் எங்களுடைய வியாபாரிகள் ஒரு சில பொருட்களோடு செல்போன்கள் புதியது பழையது ஆகியவற்றை வாங்கி விற்பனை செய்து வருகின்றனர் எனத் தெரிவித்தார்.
மேலும் அதில், சில தவறான நபர்களின் செயல்களினால் செல்போன் வியாபாரிகளுக்கு பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் இதை சங்க நிர்வாகமே தீர்த்து வைப்பதுடன் திருட்டு செல்போன்களை விற்க வந்த நபர்களை காவல்துறையில் ஒப்படைத்துள்ளாதகவும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக சங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் உள்ள இடைதரகர்கள் யாரும் திருட்டு பொருட்களை வாங்குவது இல்லை என்றும் அவ்வப்போது காவல்துறையினர்கள் வழிக்காட்டும் கூட்டத்தை கூட்டி வியாபரிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவுறுத்தியபடி வியாபார செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
Also Read
-
சோறா.. இட்லியா.. கல்லா.. சமூகநீதி விடுதியில் மாணவர்களுக்கு நேரும் அவலம் - நடவடிக்கை எடுப்பாரா வன்னியரசு?
-
சிவகங்கையில் அமைச்சர் நிர்மல் குமாரை கண்டித்து ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்! : நாவடக்கம் தேவை என அறிவுறுத்தல்!
-
“இது நீதியா? நியாயமா? மனிதாபிமானம் கொண்டு பார்த்தால்தான் நீதி தெரியும்!” : பெ.சண்முகம் கண்டனம்!
-
“விவசாயிகளுக்கு நிதி இல்லை; ஆனால், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கார்!” : தஞ்சையில் உதயநிதி கண்டனம்!
-
த.வெ.க ஆட்சியில் சட்டமன்றமே ‘ரீல்’சிற்காகத்தான் நடத்தப்படுகிறது! : கனிமொழி எம்.பி விமர்சனம்!