Tamilnadu
வடகிழக்கு பருவ மழை அக்டோபர் 28ம் தேதி தொடங்கும் : இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் தகவல்!
வட தமிழக கடலோர பகுதிகளில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக அடுத்து வரும் இரு தினங்களுக்கு வட தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களிலும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மழை பெய்தது ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு 17 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
வடகிழக்கு பருவமழை பொறுத்தவரையில் தமிழகம்,ஆந்திர கடற்கரைப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதியில் வட கிழக்கு மற்றும் கிழக்கு திசையிலிருந்து காற்று வீசக் கூடிய நிலையில் வடகிழக்கு பருவமழையானது தமிழகம் புதுவை தெற்கு ஆந்திரா ராயலசீமா தெற்கு கர்நாடகா பகுதிகளில் வரும் அக்டோபர் 28ஆம் தேதி ஓட்டி தொடங்கக் கூடும். இந்தாண்டிற்கான வட கிழக்கு பருவ வட தமிழகத்தில் இயல்பையொட்டியும் தென் தமிழகத்தில் இயல்பக விட குறைவாக பதிவாகும் என தெரிவித்துள்ளார்.
Also Read
-
இனி இந்த அரசு ‘தமிழக வாபஸ் கழக அரசு’ என்று அழைக்கப்படும்! : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
“ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் இடைத்தேர்தல்” : தாராபுரத்தில் கி.வீரமணி பேச்சு!
-
“மத ரீதியான நிகழ்ச்சி நடத்தியது மதச்சார்பின்மைக்கு விரோதமானது” : த.வெ.க அரசுக்கு CPM எதிர்ப்பு!
-
“1985 வரலாற நடக்க வச்சுடாதீங்க...” விஜய்யை எச்சரிக்கும் மீனவர்கள்.. MGR ஆட்சியில் 1985-ல் நடந்தது என்ன?
-
‘டோரதி’ – திருநங்கைகளின் வாழ்வியலைப் பேசும் துணிச்சலான முயற்சி!