Tamilnadu
நடிகர் சூரி அளித்த மோசடி புகார் : நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா முன்ஜாமீன் மனு தாக்கல்!
நடிகர் சூரிக்கு இடம் வாங்கி தருவதாக ரூ.2.70 கோடி மோசடி செய்ததாக ரமேஷ் குடவாலா மீது சூரி புகார் அளித்திருந்த நிலையில் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை தற்போது உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இந்தநிலையில் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையான ரமேஷ் குடவாலா முன்ஜாமீன் மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வர உள்ளது.
மேலும், சூரியிடம் போலிஸ் விசாரணை நடத்திய நிலையில் தற்போது முன்ஜாமீன் கோரி ரமேஷ் குடவாலா மனுத்தாக்கல் செய்துள்ளார்.
சென்னையை அடுத்த சிறுசேரியில் நிலம் வாங்கித் தருவதாக முன்னாள் டி.ஜி.பி ரமேஷ் குடவாலா ரூ.2.70 கோடி மோசடி செய்ததாக நடிகர் சூரி புகார் அளித்திருந்தார்.
முன்னதாக ரமேஷ் குடவாலா காவல் அதிகாரியாக இருந்தபோது அவரிடம் நிலப்பிரச்சனை என்று புகார் அளிக்க வந்த நபரிடம் 2.50 கோடிக்கு நிலத்தை வாங்கிக் கொள்வதாக ஒப்பந்தம் செய்துவிட்டு அதை மறைத்துவிட்டு 5.25 கோடிக்கு வாங்கியதாகப் போலி ஆவணங்கள் தயாரித்து அதற்கு ஏற்றவாறு ஊர்த் தலைவரிடம் போலி சான்றிதழ் தயாரித்து நடிகர் சூரியை ஏமாற்றி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நடிகர் சூரி பணத்தைத் திருப்பிக் கேட்ட போது 40 லட்சம் மட்டும் கொடுத்து விட்டு 2018ம் ஆண்டு ஜூன் மாதம் மீதி தொகையான 2.70 கோடி தருவதாகக் கூறி ஒப்பந்தம் போட்டனர்.
ஆனால் இரண்டு வருடங்கள் ஆகியும் பணத்தைத் திருப்பி தராததால் புகார் அளித்தார். ஆனால் சூரி புகாரின் பேரில் வழக்கு பதிவு பதிவு செய்து விசாரணை நடைபெற்ற நிலையில் தற்போது ரமேஷ் குடவாலா முன் ஜாமின் மனுத் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
மொகரம் பண்டிகை : 350 ஆண்டுகளாக தொடரும் இஸ்லாமியர்கள் மற்றும் இந்து மக்கள் திருவிழா!
-
“எம்.எல்.ஏ சேர் எனக்குத்தான்.. உச்சமடைந்த த.வெ.க-வினரின் ரீல்ஸ் வெறி.. காற்றில் பறக்கும் விதிமுறைகள்”
-
ஏன் கீர்த்தனா பெயரை முதலில் போட்டீர்கள்? : அதிகாரிகளிடம் கடிந்து கொண்ட அமைச்சர் ஜெகதீஸ்வரி!
-
200 யூனிட்டு மின்சாரம் முதல் விஜய்யின் மூன்று பித்தலாட்டங்கள் : புட்டுப்புட்டு வைத்த முரசொலி!
-
“முதல்வரின் தவறான தகவலை சுட்டிக் காட்டியதற்கு ரெய்டா? ; மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன்” : எ.வ.வேலு பேட்டி!