Tamilnadu
“விவசாயிகளுக்கு ஏராளமான நல்ல திட்டங்களைச் செயல்படுத்தியது தி.மு.க அரசு” - பொன்முடி MLA பேச்சு!
விழுப்புரத்தில் விவசாய அணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. மாநில விவசாய அணி செயலாளர்கள் சின்னசாமி, ஏ.கே.எஸ்.விஜயன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் க.பொன்முடி உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி, காஞ்சிபுரம், திருவள்ளூர், காரைக்கால் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விவசாய அணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ, தி.மு.க ஆட்சிக் காலத்தில்தான் விவசாயிகளுக்கு ஏராளமான நன்மைகள் கிடைத்தது என்றும், விவசாயிகளின் பெரும் துயரமாக இருந்த மின் கட்டணம் ரத்து செய்தது தி.மு.க ஆட்சி காலத்தில்தான் என்றும், விவசாயக் கடன் 7,000 கோடி கடன் தள்ளுபடி செய்தது தி.மு.க ஆட்சிக் காலத்தில்தான் என்றும் தெரிவித்தார்.
நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் விவசாயிகள் அனைவரும் தி.மு.கவிற்கு வாக்களிக்கும் வகையில் விவசாய அணி நிர்வாகிகள் சிறப்பாக பணியாற்றிட வேண்டும். இந்தியாவிலேயே மத்திய அரசின் விவசாயிகளுக்கு எதிரான மூன்று சட்டங்களுக்கு எதிராக முதன்முதலாக கண்டன குரல் கொடுத்தது தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தான் என்றும் பேசினார்.
நிகழ்ச்சியில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தும், மத்திய மாநில அரசுகளை கண்டித்து பல்வேறு கண்டனத் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
Also Read
-
“உடன்பிறப்பின் குரல் இணையதளத்தில் மே 31-க்குள் கருத்துகளை பதிவு செய்யவும்!” : மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
“ஒவ்வொரு நாளும் ‘விஜய்’யின் அரிதாரம் கலைந்து கொண்டே வருகிறது!” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
தமிழ்த்தாய் வாழ்த்து - முதலமைச்சர் விஜய் கெஞ்சி இருப்பது மாநில சுயாட்சிக் கொள்கைக்கு எதிரானது : அப்பாவு!
-
”பல்கலை. வேந்தராக முதலமைச்சர்.. திமுக-வின் சட்டப் போராட்டம்.. காங்கிரஸ் அமைச்சரின் அசட்டைப் பேச்சு”
-
பினராயி விஜயன் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!