Tamilnadu

ஒருபக்கம் குற்றவாளிக்கு ஆதரவாக போராட்டம்.. மறுபக்கம் பொய் பிரசாரம்: பா.ஜ.க., பச்சோந்தித்தனம் அம்பலம்!

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் நகரைச் சேர்ந்த 19 வயது பட்டியலின பெண் 4 பேர் கொண்ட கும்பலால் கடுமையாகத் தாக்கப்பட்டு கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் அந்தப் பெண் உயிரிழந்தார்.

இதையடுத்து, அந்தப் பெண்ணின் உடலை வலுக்கட்டாயமாக ஹத்ராஸுக்கு கொண்டு வந்த உ.பி போலிஸார் இரவோடு இரவாகக் தகனம் செய்தனர். போலிஸார் வலுக்கட்டாயமாக உடலைத் தகனம் செய்ததாக பலியான பெண்ணின் குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்தக் கொடூரச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட 4 பேருக்கும் உரிய தண்டனை வழங்கக்கோரி பொதுமக்களும், எதிர்க்கட்சிகளும் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக, காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் எம்.பிக்கள் இரண்டு நாள் போராட்டத்திற்கு பிறகு பாதிக்கப்படட பெண்ணின் குடும்பத்தை நேரில் சந்துத்து ஆறுதல் அளித்து உரிய நடவடிக்கை பெற்றுத்தருவதாக வாக்குறுதி அளித்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் குற்றம் சாட்டுப்பட்டு கைது செய்யப்பட்ட தாகூர் சமூகத்தை சேர்ந்த 4 இளைஞர்களையும் விடுக்ககோரி தாகூர் சமூதாய இளைஞர்களுக்கு ஆதரவாக வலதுசாரி குழுக்களான பஜ்ரங் தளம், ஆர்.எஸ்.எஸ் மற்றும் கர்ணி சேனா மற்றும் உள்ளூர் பா.ஜ.க., தலைவரும் முன்னாள் ஹத்ராஸ் எம்.எல்.ஏ.,வுமான ராஜ்வீர் சிங் பெஹல்வானும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குற்றவாளிக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய பா.ஜ.க ஆதரவாளர்களுக்கு எதிராக பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், ஒரு பக்கம் குற்றவாளிக்கு ஆதரவாக போராட்டம் நடத்தும் பா.ஜ.க சார்பில், மறுப்பக்க மக்களை குழப்புவதற்காக பொய் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுகிறது.

குறிப்பாக, மத கலவரம் மற்றும் பொய் பிரச்சாரத்தின் மூலம் குறுக்கு வழியில் பா.ஜ.க தமிழகத்தில் காலுன்ற நினைக்கிறது. அதன் ஒருபகுதியாக, உத்திர பிரதேச மாநிலத்தில் தலித் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் உள்ளதாக பா.ஜ.க கட்சியினரால், கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இது அம்மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பா.ஜ.க தேவையில்லாமல் போஸ்டர் மூலம்  அவதூறு பிரச்சாரத்தில் ஈடுபடுவதாகவும் பொதுமக்களை குழப்பும் வகையில், பொய் பிரச்சாரம் செய்யும் பா.ஜ.கவினர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தி.மு.க எம்.எல்.ஏ மனோதங்கராஜ் தலைமையில், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.

இதுதொடர்பாக, கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகி ஒருவர் கூறுகையில், ”கன்னியாகுமரியில் நீண்ட நாட்களாக கலவரம் ஏற்படுத்த பா.ஜ.க முயற்சிக்கிறது. ஆனால், ஜனநாயக சக்திகளால் பா.ஜ.கட்சியின் சதிகள் முறியடிக்கப்பட்டிருக்கிறது.

அந்த ஆத்திரத்திலும், தங்கள் மீது ஏற்பட்டுள்ள குற்றச்சாட்டை மறைப்பதற்காக, ஜனநாயக அமைப்புகள் மற்றும் எதிர்க் கட்சிகள் மீது அவதூறு பரப்பி களங்கம் ஏற்படுத்த பா.ஜ.க முயற்சிக்கின்றனர். குற்றவாளிக்கு ஆதரவாக போராட்டம் நடத்தும் பா.ஜ.க, இங்கு குற்றவாளிகளை பாதுகாக்கவும், பிரச்சனையை திசை திருப்பும் வேலையையும் செய்கிறது.

இடத்துக்கு இடம் மாறும் பச்சோந்தி போல், பா.ஜ.க செயல்படும் என அனைவரும் அறிந்ததே. அவை உண்மை என்று நிரூபணம் ஆகும் வகையில், இந்த போஸ்டர் விவகாரத்தில் பா.ஜ.கட்சியின் பச்சோந்தித்தனம் மக்கள் மத்தியில் அம்பலமாகியுள்ளது” எனத் தெரிவித்தார்.

Also Read: ஹத்ராஸ் வழக்கில் கைது செய்யப்ப்பட்டவர்களுக்கு ஆதரவாக ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க ஆதரவாளர்கள் போராட்டம்!