Tamilnadu
கிராம சபைக்கு மாற்றாக மாறிய ‘மக்கள் சபை’ : வேளாண் மசோதாக்களுக்கு எதிராக தமிழகம் முழுக்க தீர்மானம்!
மத்திய பா.ஜ.க அரசு அரசு வேளாண் அவசரச் சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டங்களால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக இந்தச் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் இன்று தமிழ்நாட்டில் நடைபெறும் கிராமசபை கூட்டங்களில் இந்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும்படி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த நிலையில், காந்தி ஜெயந்தியையொட்டி இன்று நடைபெறுவதாக இருந்த கிராம சபை கூட்டம் கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்படுவதாக அ.தி.மு.க அரசு அறிவித்தது. இந்நிலையில் பொது இடத்தில் சமூக இடைவெளியை பின்பற்றி கிராம சபை கூட்டத்திற்கு மாற்றாக மக்கள் சபை கூட்டம் நடத்துமாறு என்று தி.மு.க ஊராட்சி மன்ற நிர்வாகிகளுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
இதனையடுத்து தி.மு.க சார்பில் பல்வேறு இடங்களில் மக்கள் சபை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த மக்கள்சபை கூட்டங்களில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய மசோதாக்களுக்கு கண்டனம் தெரிவித்து, தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்து அதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும், கிராம சபைக் கூட்டத்தை ரத்து செய்த மாநில அரசைக் கண்டித்தும் வேளாண் மசோதாக்களை நிறைவேற்றிய மத்திய அரசை கண்டித்தும் தமிழகத்தின் பல கிராமங்களில் தி.மு.க தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
Also Read
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!