Tamilnadu
“அரசின் அரைகுறை வழிமுறையால் மொத்த அங்காடியை திறந்தும் பயனில்லை” - கோயம்பேடு வியாபாரிகள் அதிருப்தி!
கொரோனா தொற்று காரணமாக கடந்த 5 மாதங்களாக கோயம்பேடு மொத்த அங்காடி மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில், பல்வேறு கட்ட வழிமுறைகளுடன் அரசின் உத்தரவுப்படி அங்காடி திறக்கப்பட்டது. அதன்படி நள்ளிரவு முதல் வாகனங்களில் காய்கறிகள் வந்திறங்க, வியாபாரிகள் அதனை வாங்கி செல்கின்றனர்.
இதனிடையே பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் வியாபாரிகள் வந்து செல்கின்றனர்.
மேலும், வாகனங்கள் வந்து செல்ல கூடுதலாக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கூறப்பட்ட போதிலும், வாகனங்கள் உள்ளே வருவதில் சிக்கல் இருப்பதால், குறிப்பிட்ட நேரத்தில் காய்களை இறக்குவதிலும், வியாபாரம் மேற்கொள்வதிலும் சிக்கல் இருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
காய்கறிகளின் விலையை பொறுத்தவரை இன்று வீழ்ச்சியடைந்துள்ள போதும், எதிர்பார்த்த அளவு வியாபாரம் இல்லை எனவும் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
அதுமட்டுமின்றி கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வாகனம் அனுமதி மறுப்பது காரணமாக வாடிக்கையாளர் வருவது குறைந்து காணப்படுகிறது. மேலும் வாடிக்கையாளர்களின் வரத்தை குறைவதன் காரணத்தினால் காய்கறி விற்பனையிலும் மந்த நிலையே உள்ளது என விற்பனையாளர்கள் மிக வேதனையான தெரிவிக்கின்றனர்.
அதேபோல் வாகன அனுமதி நேரத்தை அதிகரித்தால் மட்டுமே கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனையை அதிகரிக்க முடியும் என்றும் தெரிவித்தனர்.
Also Read
-
தமிழ்நாடு அரசின் Iconic Projects...அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு... விவரம்!
-
திருத்தணி வட மாநில இளைஞர் தாக்கப்பட்ட விவகாரம் : நடந்தது என்ன? - வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் விளக்கம்!
-
“கோவை மக்களுக்கு 2026 புத்தாண்டுக்கான பரிசு இதுதான்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
கோவையில் 11,000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய துணை முதலமைச்சர் : புதிய திட்டங்களுக்கு அடிக்கல்!
-
VBG RAMG சட்டத்தை எதிர்க்கும் பஞ்சாப் : சட்டமன்றத்தில் ஒன்றிய அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடிவு!