Tamilnadu

தனியாத கொரோனா பரவல்... மேலும் 5,645 பேருக்கு தொற்று... ஒரே நாளில் 85 பேர் பலி - தமிழக கொரோனா நிலவரம்!

தமிழகத்தில் புதிதாக 92 ஆயிரத்து 166 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 5,645 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. ஆகவே மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5.75 லட்சத்து 17 ஆக உள்ளது.

சென்னையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக 1000க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று 1,187 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அதற்கடுத்தபடியாக கோவையில் 656, சேலத்தில் 296, செங்கல்பட்டில் 259, திருவள்ளூரில் 235, கடலூரில் 212 என அதிகபட்ச பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

மேலும், கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 85 பேர் பலியாகியிருக்கிறார்கள். இதுவரையில், 9,233 பேர் தமிழகத்தில் கொரோனாவால் இறந்திருக்கிறார்கள்.

இதனையடுத்து, ஒரே நாளில் 5, 612 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார்கள். இதுகாறும் தமிழகத்தில் 5 லட்சத்து 19 ஆயிரத்து 448 பேர் கொரோனாவில் இருந்து மீண்டிருக்கிறார்கள். ஆகையால், 46 ஆயிரத்து 336 பேருக்கு தற்போது கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Also Read: ஐ.நா மேடையில் வாய்ச்சண்டை போடும் உலக நாடுகள் : கொரோனா பாதிப்பு, காலநிலை மாற்றத்திற்கு தீர்வு எட்டப்படுமா?