Tamilnadu
பெற்றோரை கவனிக்காத பிள்ளைகள் குறித்த புகார்களின் மீது 6 வாரத்தில் நடவடிக்கை எடுத்திடுக - ஐகோர்ட் உத்தரவு!
தேசிய தென் இந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் அய்யாகண்ணு தாக்கல் செய்த மனுவில், மத்திய அரசு, 2007 ம் ஆண்டு கொண்டு வந்த பெற்றோர், மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பராமரிப்பு சட்டத்தை, அமல்படுத்தும் வகையில் தமிழக அரசு 2009 ம் ஆண்டு விதிகளை வகுத்தது. இருப்பினும், இந்த சட்டத்தை அதிகாரிகள் அமல்படுத்துவதில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகன்களால் பராமரிக்கப்படாத பெற்றோரிடம் இருந்து புகர்களைப் பெற மண்டல வருவாய் அதிகாரிக்கு இந்த சட்டப்பிரிவு அதிகாரம் வழங்கியுள்ளது. ஆனால், இந்த சட்டத்தை அமல்படுத்த அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால், சட்டத்தை அமல்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா அமர்வு பெற்றோர், மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பராமரிப்பு சட்டத்தின் படி பெற்றோரை கவனிக்காத பிள்ளைகள் மீது மூத்த குடிமக்கள் புகார் அளித்தால் 6 வார காலத்திற்குள் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வருவாய் கோட்டாட்சியர்களுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தது.
Also Read
-
“74,168 விவசாயிகளுக்கு குறைந்தபட்ச மானிய விலை (MSP) நிதி வழங்காதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
“அரசியலமைப்புப்படி வழங்க வேண்டிய 27% இடஒதுக்கீடு எங்கே போனது? இதுதான் சமூக நீதியா?” : பி.வில்சன் எம்.பி!
-
தமிழ்நாடு விளையாட்டு மாநாடு 2.0 - 2025 தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
“பா.ஜ.க.வின் பழிவாங்கும் நோக்கம் அம்பலமாகியுள்ளது!”: ‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கு குறித்து முதலமைச்சர் பதிவு!
-
தி.மு.கழக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு! : எங்கு? எப்போது?