Tamilnadu

புது ‘ஹாட்ஸ்பாட்’ ஆகும் கோவை, சேலம், கடலூர் : மேலும் 5,990 பேருக்கு கொரோனா... 98 பேர் பலி! #CoronaUpdates

தமிழகத்தில் புதிதாக 73 ஆயிரத்து 883 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 5,990 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து மொத்த பாதிப்பு 4 லட்சத்து 39 ஆயிரத்து 959 ஆக அதிகரித்துள்ளது. அதில் புதிதாக சென்னையில் 1,025 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதற்கடுத்தபடியாக கோவையில் 579, கடலூரில் 405, சேலத்தில் 403, செங்கல்பட்டில் 390 என அதிகபட்ச பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் புதிதாக 28 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதனையடுத்து மொத்த பாதிப்பு 6347 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மேலும் 98 பேர் கொரோனாவால் உயிரிழந்திருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதில் அதிகபட்சமாக சென்னையில் 19 பேரும், குமரியில் 9, செங்கல்பட்டில் 8, கோவை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் தலா 5 என இறப்புகள் பதிவாகியுள்ளது.

மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் 5,891 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார்கள். அதன்படி மொத்தமாக இதுகாறும் 3 லட்சத்து 80 ஆயிரத்து 63 பேர் கொரோனாவில் இருந்து மீண்டிருக்கிறார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே தற்போது 52 ஆயிரத்து 380 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Also Read: “கொரோனா தடுப்புப் பணிகளுக்காக செலவிடப்படும் தொகையில் மாபெரும் ஊழல்” - தி.மு.க எம்.எல்.ஏ குற்றச்சாட்டு!