Tamilnadu
நாளை தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு : சென்னையில் லேசான மழை பெய்யக்கூடும்!
தென் தமிழகத்தை ஒட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக உள் மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், சேலம், கரூர், கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யும்.
அதேபோல, நாளை (01.09.2020) உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும், சேலம், நாமக்கல், திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 4 வரை தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். செப்டம்பர் 2 மற்றும் 3ம் தேதிகளில் கேரளா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடல் உயர்அலை முன்னறிவிப்பு:
தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை நாளை 01.09.2020 இரவு 11.30 மணி வரை கடல் உயர் அலை 1.9 முதல் 2.9 மீட்டர் வரை எழும்பக்கூடும்.
Also Read
-
“கலைஞரை பற்றிப் பேச பழனிசாமிக்கு எந்த யோக்கியதையும் கிடையாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்!
-
“ஆணவத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் பழனிசாமி” : தேர்தல் பரப்புரையில் கனிமொழி விமர்சனம்!
-
தமிழ்நாடெங்கும் ஹிட்: ”ஸ்டாலின் தொடரட்டும்.. தமிழ்நாடு வெல்லட்டும்" இணையத்தில் வைரல்!
-
51-ஆ அல்லது 52-ஆ? : சொந்த வயதைக் கூட சரியாகக் குறிப்பிடாத விஜய்!
-
2026 தேர்தல் : திமுக கூட்டணியில் களமிறங்கும் 28 பேர்.. காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் விவரம் உள்ளே!