Tamilnadu
இ பாஸ் முறையால் அவதியுறும் மக்கள்: நீடிக்குமா? ரத்தாகுமா? ஆக.,29ல் தமிழக அரசு ஆலோசனை - ஐகோர்ட்டில் தகவல்
கொரோனா பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, மக்கள் வேலைவாய்ப்பையும், வருமானத்தையும் இழந்து தவிக்கின்றனர். இதனால் சென்னைக்கு பிழைப்பு தேடி வந்த மக்கள் பலரும், ஊரை காலி செய்து விட்டு சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர்.
சொந்த ஊர்களுக்கு திரும்புகிறவர்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை, பெசன்ட் நகரைச் சேர்ந்த சேசுபாலன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், கொரோனா தொற்று நவம்பர் மாதம் வரை உச்சத்தில் இருக்கும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்… இதனால் உணவு மற்றும் உறைவிடத்திற்கான செலவை சமாளிக்க முடியாமல் மக்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முயற்சித்து வருவதாகவும், அவர்களுக்கு இ – பாஸ் வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமணம், மரணம் மற்றும் மருத்துவ காரணங்களுக்கு மட்டுமே இ– பாஸ் வழங்கப்படுவதால், சென்னையை விட்டு வெளியேற விரும்பும் மக்களை சொந்த ஊர்களுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும்… அல்லது அவர்களுக்கு உணவு, உறைவிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில், இன்று விசாரணைக்கு வந்தது அப்போது அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் இ பாஸ் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வரும் 29ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும் தெரிவித்தார் அதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் தேவைப்பட்டால் மனுதாரர் மீண்டும் நீதிமன்றத்தை நாடலாம் எனவும் மனுதாரருக்கு அனுமதி அளித்தும் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்
Also Read
-
மாநிலம் முழுவதும் நேரடி உரங்களுக்கு அதிக தேவை நிலவுகிறது! : பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
-
பவள விழா கண்ட இயக்கம் தி.மு.க.வின் முப்பெரும் விழா! : நாளை (செப்.17) கரூரில் கருத்தியல் கோலாகலம்!
-
சென்னையின் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்... காவல்துறை அறிவிப்பு... முழு விவரம் உள்ளே !
-
சென்னையில் நாளை 12 வார்டுகளில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் : இடங்கள் விவரங்களை வெளியிட்டது மாநகராட்சி !
-
ஆசியாவிலேயே முதல்முறை... சென்னையில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு AI கற்றுக்கொடுக்க சிறப்புத் திட்டம் !