Tamilnadu
தமிழகத்தில் குறையாத கொரோனா பாதிப்பு - தடுப்பு நடவடிக்கைகளில் கோட்டைவிட்ட அ.தி.மு.க அரசு!
தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 5,995 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,67,430 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் கொரோனா பாதித்த 101 பேர் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா பலி 6,340 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 74,334 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 40,62,943 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று 1,282 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தவர்களில் இன்று மட்டும் 5,995 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,07,677 ஆக உள்ளது. தற்போது 53,413 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில், அரசு எடுத்த தடுப்பு நடவடிக்கை அனைத்தும் தோல்வி அடைந்து விட்டதாகவும், கொரோனா பேரிடலும் ஊழல் செய்யும் அரசாக அ.தி.மு.க அரசு உள்ளது என பலரும் விமர்சித்துள்ளனர்.
Also Read
-
”விடுதலைக்குப் போராடிய தீரர்” : முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!
-
மகளிருக்கு ரூ.1000 : திராவிட மாடல் ஆட்சியை பின்பற்றும் கேரளம்!
-
தமிழ்நாட்டின் கடல்சார் வர்த்தகத்தை உலகளவில் மேம்படுத்தி வருகிறோம்! : மும்பையில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!
-
"டீசல் பேருந்துகளின் பயன்பாடு குறைக்கப்படாது" : அமைச்சர் சிவசங்கர் உறுதி!
-
”ஒன்றிய பா.ஜ.க அரசின் கைப்பாவையாக மாறும் தேர்தல் ஆணையம்” : முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம்!