Tamilnadu

ஆளே இல்லாத வீட்டிற்கு தகரம் அடித்து கணக்குக் காட்டும் அரசு?: இ-பாஸ் ஊழலை அடுத்து இதிலும் உண்மை அம்பலம்!

கொரோனா பாதிப்பில் சென்னையைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டம் அதிக பாதிப்பை சந்தித்து வருகிறது. நாள்தோறும் அதிகரிக்கும் கொரோனா பரலைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக, கொரோனா பரவலைத் தடுக்க, கொரோனா பாதித்த பகுதிகளில் மருத்துவ முகாம்கள் மற்றும் நடமாடும் பரிசோதனை வாகனம் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதுமட்டுமல்லாது, கொரோனா பாதிக்கப்பட்டவரின் வீட்டை தனிமைப்படுத்த மெட்டல் ஷீட் தடுப்பும் அமைத்து வருகிறது.

இந்நிலையில், காஞ்சிபுர மாவட்ட நிர்வாகம் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அதிக பணம் செலவு செய்து ஊழல் முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலம் எதிரே உள்ள பல்லவன் நகரில், கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி ஒரு வீட்டின் முன்பகுதியில் நகராட்சி ஊழியர்கள் மெட்டல் ஷீட் தடுப்பு அமைத்துள்ளனர்.

அதுமட்டுமல்லாது, மேற்கண்ட வீட்டில், அதாவது யாரும் வசிக்காத வீட்டில், வெப்பநிலை பரிசோதனை செய்ததாக நகராட்சி தற்காலிக ஊழியர்கள் சுவரில் ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மக்கள் கடந்த 3 ஆண்டுகளாக அந்த வீடு பூட்டிக் கிறகிறது.

சம்பந்தப்பட்ட வீட்டை சேர்ந்த குடும்பத்தினர் வெளியூரில் வசிக்கின்றனர். யாருமே இல்லாத வீட்டுக்கு ஏன் தடுப்பு அமைக்கிறீர்கள் என நகராட்சி ஊழியர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால், ஊழியர்கள் அதை பொருட்படுத்தாமல், தடுப்புகளை வைத்து விட்டு சென்றுள்ளனர்.

அதேபோல், பல இடங்களில் இதுபோன்ற தடுப்புகள் வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டிற்கு தடுப்புகள் அமைத்து 14 நாட்கள் தனிமைப்படுத்துதால். மேலும், பல இடங்களில் நோயாளிகள் வசிக்கும் தெரு முழுவதும் 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் என்ற நடைமுறை இருக்கிறது.

இந்நிலையில், இந்த தனிமைப்படுத்தப்படும் ஒரு வீட்டிற்கு மெட்டல் ஷீட் அடிக்க 14 நாட்களுக்கு 8 ஆயிரம் என ஒதுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால், வெறும் 5 அல்லது 6 நாட்கள் மட்டுமே மெட்டல் ஷீட் அடித்துவிட்டு 14 நாட்களுக்கான கணக்கு காட்டிவிட்டு, அதே ஷீட்டை மற்றொரு வீட்டில், தடுப்புகள் அமைக்க எடுத்து செல்வதாக கூறப்படுகிறது.

அ.தி.மு.க அரசு இ-பாஸ் மூலம் முறைகேடு செய்து ஊழலில் ஈடுபட்டதைப் போல், தற்போது தகரம் அடிப்பதிலும் தனது கைவரிசையை காட்டியுள்ளதாக அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

Also Read: “ரூ.600-க்கு ஸ்டிக்கர் ஒட்டினால் தான் ஆட்டோக்களுக்கு எஃப்.சி”: ஆட்டோ ஓட்டுநர்களை வஞ்சிக்கும் அதிமுக அரசு!