Tamilnadu

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத அமைச்சர்கள்.. அறிவுரை வழங்கிய சென்னை ஐகோர்ட்! #CoronaCrisis

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த பொதுநல வழக்கில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் உரிய சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை என்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படவில்லை என்று சுட்டிக் காட்டியிருந்தார் .

இது தொடர்பாக புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது .

வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறினர். அதே வேளையில் முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் அரசு விழாக்களில் பங்கேற்பது தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று தெரிவித்தனர்.

ஆனால் தனியார் நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கும் போது கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உரிய முறையில் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

Also Read: கொரோனா வைரஸோடு வீம்பாக விளையாடிய மதுரை அ.தி.மு.க-வினர் : குணமடைந்த அமைச்சரை வரவேற்க குவிந்த கூட்டம்!