Tamilnadu
மணல் கொள்ளையை தட்டிக் கேட்ட தி.மு.க ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி கொலை: சட்ட ஒழுங்கை கோட்டை விடும் எடப்பாடி?
சென்னையை அடுத்து ஆவடி அருகே உள்ள கொசவம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தி.மு.க ஊராட்சி மன்ற தலைவர் பரமகுரு. இவர் நேற்றைய தினம் மாலை கொசவம்பாளையம் பகுதியில் உள்ள கால்வாய் பணிகளை ஆய்வு செய்வதற்காக அங்குச் சென்றுள்ளார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் அவரை பின் தொடர்ந்து வந்த மூன்று பேர் பரமகுருவை சரமாரியாக வெட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில் சம்பவ இடத்திலேயே பரமகுரு உயிரிழந்தார்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த பரமகுருவைப் பார்த்தும் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் திருநின்றவூர் நிலையத்தில் தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த திருநின்றவூர் போலிஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது பரமகுரு கொலை செய்யப்பட்ட இடத்தில் உள்ள மளிகைக்கடையில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலிஸார் சோதனை செய்ததில் கொலையாளிகள், திருநின்றவூர் பெருமாள்கோயில் தெருவைச் சேர்ந்த ராஜேஷ், அப்பு, விக்கி, கலாநிதி ஆகியோர் என்பது தெரியவந்தது.
கொசவன்பாளையம் கிராமத்தை ஒட்டி கூவம் ஆறு செல்வதால் ஆற்றிலிருந்து மணல் கொள்ளையில் ஈடுபட்ட இவர்களிடம் எதிர்ப்பு தெரிவித்து மணல் கொள்ளையில் ஈடுபட்டால் காவல் துறையில் புகார் செய்து குண்டர் சட்டத்தில் அடைப்பதாக பரமகுரு கூறியதாகவும், இதனால் பேச்சு வார்த்தை நடத்த வந்தவர்கள் பரமகுரு ஒத்துக்கொள்ளாத்தால் அவரை வெட்டி கொலை செய்ததாவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
பருவமழை குறித்து திமுக சார்பில் நாளை ஆலோசனைக் கூட்டம்... தலைமைக் கழகம் அறிவிப்பு !
-
காவலர் வீரவணக்க நாள் விழா : 175 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
தொடங்கிய வடகிழக்கு பருவமழை... தென்சென்னை பகுதியில் துணை முதலமைச்சர் ஆய்வு!
-
முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு !
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்... மீண்டும் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் பலி !