Tamilnadu

“தம்பி படிப்புக்காக காய்கறி விற்ற மாணவி - வீடுதேடி உதவி செய்த தி.மு.க எம்.எல்.ஏ” : நெகிழ்ச்சி சம்பவம்!

மதுரை மாவட்டம் திருப்புரங்குன்றம் வில்லாப்புரம் பகுதியைச் சேர்ந்தவர் மாணவி முருகேஸ்வரி. 6ம் வகுப்பு படித்துவந்த மாணவி முருகேஸ்வரியின் தாய் - தந்தை இறந்துவிட்டதால் தனது பாட்டியின் பாதுகாப்பில் வளர்ந்து வருகிறார். பாட்டிக்கும் வயதானதால் பாட்டியுடன் சேர்ந்து காய்கறி விற்க தொடங்கியுள்ளார் மாணவி முருகேஸ்வரி.

“இனி தன்னால் படிக்க முடியாது என்பதால் தனது தம்பியை படிக்கவைத்து நல்ல நிலைமைக்கு ஆளாகவேண்டும்” என்ற கனவுடன் இந்த சிறுவயதிலேயே காய்கறி விற்று தம்பிக்காக பணம் சேர்த்து வருகிறார் முருகேஸ்வரி. சிறுமி முருகேஸ்வரியின் இந்த வேலைத் தொடர்பாகவும், வறுமையில் இருக்கும் குடும்ப பின்னணி பற்றியும் திருப்பரங்குன்றம் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரவணன் கவனத்திற்குச் சென்றுள்ளது.

இதனையடுத்து சிறுமியின் வீட்டிற்குச் சென்ற எம்.எல்.ஏ சரவணன் சிறுமியின் குடும்பத்திற்கு தி.மு.க சார்பில் நிதி உதவி அளித்தார். மேலும், முருகேஸ்வரி மற்றும் அவரது தம்பியின் படிப்பு செலவு அனைத்தையும் இனி தான் ஏற்பதாக உறுதி அளித்தார். இரண்டு பேரும் படித்து பெரிய ஆளாக வரவேண்டும் என இருவரை ஊக்கப்படுத்தினார்.

அதுமட்டுமல்லாது, ஊராடங்கால் வறுமையில் வாடிய சிறுமியின் குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகைப் பொருட்க அடங்கிய தொகுப்பினை வழங்கியதோடு, கடையில் சிறுமியுடன் சேர்ந்து விபாயரம் செய்து, கடையில் ஒருநாள் விற்பனையாகும் மொத்த காய்கறிக்களையும் பணம் கொடுத்து பெற்றுக்கொண்டார்.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் எம்.எல்.ஏ சரவணனின் இந்த செயலுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: பல்டி பழனிசாமிக்கு ஆதரவாக பல்டி அடித்த நியூஸ்7 தொலைக்காட்சி: ஆதாரத்தோடு கேள்வி எழுப்பிய உதயநிதி ஸ்டாலின்!