Tamilnadu
“நாள்தோறும் மதுகுடித்து விட்டு தகராறு - நிம்மதி இழந்து நிற்கிறேன்”: மகனை கைது செய்ய தாய் கண்ணீர் மல்க மனு
நாள்தோறும் மதுகுடித்து விட்டு தகராறு செய்யும் மகனை கைது செய்யக்கோரி தாயார் ஒருவர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
தூத்துக்குடி அருகே உள்ள அத்திமரப்பட்டி பகுதியைச் சார்ந்தவர் தாழபுஷ்பம் - முனியசாமி இவர்களது மகன் சின்னதுரை. 35 வயதான சின்னதுரை தினமும் மது அருந்திவிட்டு கொடுமைப்படுத்துவதாகவும், அரசு உடனடியாக டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என அவரது தாயார் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக அவர் அளித்த மனுவில், வயது முதிர்வு காரணமாக தனது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இந்நிலையில் தனது மகன் சின்னத்துரை தினமும் மது அருந்திவிட்டு தன்னை கொடுமைப்படுத்தி அடித்து துன்புறுத்தி வருவதாகவும் சில நாட்களாக மதுக்கடைகளை மூடி இருந்த போது மது அருந்தாமல் திருந்தி இருந்தான்.
இந்நிலையில் மீண்டும் மதுக்கடைகளை அரசு திறந்ததால் மீண்டும் தான் நிம்மதி இழந்து நிற்பதாகவும், தனது மகனின் கொடுமை தாங்க முடியாமல் மருமகள் சென்றுவிட்டார்.
எனவே இந்த பிரச்சினைக்கு நிரந்தரமாக முடிவுகட்ட தமிழக அரசு டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும். தன்னை துன்புறுத்தி வரும் மகனை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் இல்லாவிட்டால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என தெரிவித்தார்.
Also Read
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?
-
சென்னை, தரமணியில் தமிழ் அறிவு வளாகம் : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.52 கோடி செலவில் 208 புதிய நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் - திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அஜித் குமார் மரணம் விவகாரம்: “Sorry மா.. ஒரு 'அப்பாவாக.. ஒரே Phone Call!” - அமைச்சர் TRB ராஜா நெகிழ்ச்சி!