Tamilnadu

மதுபோதையில் காரில் வேகமாக வந்து விபத்துஏற்படுத்திய இளைஞர்கள் - முதல் நாளே நடந்த அட்டூழியம்!

கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. 3வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப் போயுள்ளது. குறிப்பாக தமிழக மக்கள் உணவுக்கே வழியில்லாமல் அல்லல்படுகின்றனர்.

இந்தசமயத்தில் டாஸ்மாக் கடைகளை திறந்து அதன் மூலம் கல்லாவை கட்டும் ஒரு மோசமான முடிவை எடப்பாடி அரசு கையில் எடுத்தது. டாஸ்மாக் கடைகளை திறந்து மேலும் பலரை கொரோனா தொற்றுக்கு ஆளாக்கவே இந்த அரசு ஏற்பாடு செய்வதாக தமிழக மக்கள் குற்றம்சாட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மதுபான கடைகள் திறக்கபட்ட முதல் நாளே சென்னையில் மது போதையில் இருந்தவர்கள் விபத்து ஏற்படுத்திய சம்பவம் பொதுமக்களிடையே அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியை சேர்ந்தவர் சேக் தாவுத். இவர் சங்கர் நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சோதனைசாவடி அருகே தனியார் உணவகம் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் வியாபாரம் செய்துவிட்டு கடையை அடைத்த பின்பு வீட்டிற்க்கு சென்றுள்ளர்.

அவர் வீட்டிற்க்கு சென்ற சில நிமிடங்களில் பல்லாவரத்தில் இருந்து பம்மல் பகுதியை நோக்கி அதிவேகமாக வந்த கார் ஒன்று கட்டுபாட்டை இழந்து சாலையின் ஓரம் இருந்த உணவு கடையின்னுள் புகுந்தது. இதில் கடையின் முன் பகுதி முழுவதும் சேதமடைந்தது. இதை கண்ட அப்பகுதிமக்கள் கடையின் உரிமையாளர் மற்றும் சங்கர் நகர் காவல் நிலையத்திற்க்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் லேசான காயங்களுடன் காரினுள் இருந்த பொழிச்சலூர் பகுதியை சேர்ந்த ஓட்டுனர் சரவணன் மற்றும் ரமேஷ், எட்வின் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவரகள் மூவரும் மது போதையில் இருந்ததை உறுதி செய்ததை அடுத்து வழக்கு பதிவு செய்த போலிஸார் விசாரித்து வருகின்றனர்.

அதேப்போல், கோவை தொண்டாமுத்தூர் அடுத்த புதுப்பாளையம் பகுதியில் வடவள்ளியைச் சேர்ந்த இளைஞர்கள் மதுபோதையில் காரை ஓட்டிய நிலையில் கார் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதை அடுத்து, பொதுமக்கள் போதை இளைஞருக்கு தர்ம அடி கொடுத்தனர். பின்னர், தகவல் கிடைத்தன் பெயரில் வந்த திருப்பூர் வடக்கு போலீசார் இளைஞரை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று காரணமாக 44 நாட்கள் ஊரடங்கு பின்னர் முதல் நாளான நேற்று ஒரு சில பகுதியில் அரசு மதுபான கடைகள் திறக்கப்பட்ட பிறகு இது போன்ற விபத்துகள் நடைபெறுவது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “மது அருந்திவிட்டு தகராறு செய்த கணவன்” : மனைவி, மகள் தீக்குளிப்பு - டாஸ்மாக்கால் முதல்நாளே ஏற்பட்ட சோகம்!