Tamilnadu
பேரறிஞர் அண்ணா நினைவு தினம் : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதிப் பேரணி!
பேரறிஞர் அண்ணாவின் 51-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப்பேரணியாகச் சென்று சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்படும் என தி.மு.க சார்பில் அறிவிப்பு வெளியானது.
அதன்படி, இன்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் தொடங்கிய இந்த அமைதிப்பேரணி மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் வரை நடைபெற்றது.
அண்ணா நினைவிடத்திற்குச் சென்ற தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்தும் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்கள்.
அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தியபிறகு முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடத்தில் மலர் தூவி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். மேலும் முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடத்தில் “எங்களை ஏங்க விட்டு எங்கே சென்றாய் அண்ணா - மு.க” என தலைவர் கலைஞர் கூறிய வார்த்தைகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இந்த அமைதிப் பேரணியில் தி.மு.க பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தி.மு.க எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சியின் அனைத்து பிரிவு நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.
Also Read
-
ரூ.36.6 கோடியில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் மதுரை Master Plan 2044 வரை... அசத்திய முதலமைச்சர்!
-
SWAYAM தேர்விலும் தமிழக மாணவர்களிடம் வன்மத்தை கொட்டும் ஒன்றிய பாஜக அரசு.. ஆதாரத்துடன் சு.வெ. கண்டனம்!
-
திட்டப் பணிகள் திறப்பு முதல் 1.77 லட்ச பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் வரை... மதுரையில் முதலமைச்சர்!
-
மதுரை பந்தல்குடி வாய்க்காலில் மேம்பாட்டுப் பணிகள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
-
மதுரை, மேலமடை பகுதியில் ரூ.150 கோடியில் “வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்” - திறந்து வைத்தார் முதல்வர் !