Tamilnadu
“10 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்ததுபோலவே உள்ளது” : அரசு பள்ளிகளின் அவலத்தை அம்பலப்படுத்திய நடிகர் சூர்யா!
நடிகர் சூர்யாவின் அகரம் ஃபவுண்டேஷனின் கடந்த வந்த பாதை குறித்த நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூர்யா, தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் இன்னும் அடிப்படை வசதிகளே இல்லை.
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தது போலவே தற்போதும் உள்ளது. அடிப்படை வசதிகள் இல்லை, ஆசிரியர் இல்லை எனவே அகரத்தால் பயனடைந்த மாணவர்கள் தாங்கள் படித்தப் பள்ளிகளின் மேம்பாட்டிற்கு நேரம் செலவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், பள்ளிகளில் சாதிப்பெயர் சொல்லி ஆசிரியர்கள் திட்டுவது போன்ற நிகழ்வு நடப்பது வருத்தம் அளிப்பதாக குறிப்பிட்டார். சமூகத்தை பற்றியும் யோசிப்பதுதான் வாழ்க்கை என தெரிவித்த அவர், குடும்பம், சமூகம், செய்யும் தொழில் மூன்றுக்கும் சரிசமமாக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
அதன்பிறகு, அறக்கட்டளை நிர்வாகிகளின் பங்களிப்புகள் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசிய சூர்யா, அறக்கட்டளை நிர்வாகி ஜெயஸ்ரீ என்பவரை பாராட்டி பேசும்போது அவரது மகனை கட்டியணைத்து கண்கலங்கி பேசினார்.
இந்நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா, நடிகர் கார்த்தி, சிவகுமார் மற்றும் அகரம் நிறுவன நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Also Read
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!