Tamilnadu
“தமிழகத்தில் அதிகரித்து வரும் இந்தி ஆதிக்கமும்.. மொழிப்போர் தியாகிகள் தினமும்” - ஒரு ஊடகவியலாளரின் பதிவு!
இந்தியாவை இந்து நாடாகவும், இந்தியை தேசிய மொழியாகவும் மாற்ற மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு பல்வேறு சட்டத்திருத்தங்களின் மூலம் தொடர்ந்து முயற்சித்து வருகிறது.
இந்நிலையில், இந்தி திணிப்புக்கு எதிராகப் போராடி உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளின் தினம் இன்று அனுசரிக்கப்படும் வேளையில் ஊடகவியலாளர் ஒருவரின் சமூக வலைதள பதிவு அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
பேச்சு வழக்கில் எழுதியுள்ள அந்தப் பதிவில், தனது மனைவி மக்களுடன் உணவகத்திற்கு சென்ற அவர், சுடு தண்ணீர் என தமிழிலும், ஆங்கிலத்திலும் கேட்டது உணவக ஊழியருக்கு புரியாததால் ஒரு வழியாக இந்தியில் கேட்டுள்ளார். அதன் பிறகு அந்த ஊழியர் ஒரு குவளையில் சுடு தண்ணீரை கொண்டு வந்து கொடுத்துள்ளார்.
இனி ஓட்டல்களில் வந்து சாப்பிடவே யோசிக்கவேண்டும் போல என அந்த மனைவி சலிப்பாக பேசியுள்ளார். தற்போது பிரச்னை இதுவல்ல. எதிர்காலத்தில் தமிழகம் முழுவதும் இந்தி மொழியை மட்டும் பேசும், தெரிந்து வைத்திருப்பவர்கள் குடியேறிவிட்டால் இங்குள்ள தமிழர்களின் கதி என்னவாகும்? அவர்களின் அன்றாடத் தேவைகளுக்கு எவ்வாறு கேட்டுப்பெறுவார்கள்?
ஏற்கெனவே, ரயில்வே உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தி மொழி பேசுபர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. நீட் தேர்வுக்கான தமிழக மாணவர்களின் எண்ணிக்கை 17 சதவிகிதத்திற்கும் குறைவாக இருக்கும் நிலையில் இதுபோன்று இந்திக்காரர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது அடுத்த வேளை கஞ்சிக்கே கேடு விளைவித்திடும் என அச்சம் மேலோங்கி வருகிறது.
இந்தி திணிப்புக்கு எதிராக தன்னுயிரை நீத்த மொழிப்போர் தியாகிகளை விட, தங்களின் நில, மொழி உரிமையை காத்துக்கொள்ள மக்கள் பன்மடங்கு போராட்டத்தில் ஈடுபட வேண்டிய சூழலே தற்போதைய சர்வாதிகார, பாசிச அரசினால் ஏற்பட்டு வருகிறது என்பதே திண்ணம்.
Also Read
-
மும்முரமாக நடைபெறும் தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை மேம்பாலப் பணி! : அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு!
-
“முதலமைச்சர் கோப்பை 2025-ல் 16 லட்சம் இளைஞர்கள் பங்கேற்பு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
“நாட்டிற்கு பெருமை சேருங்கள்! களம் நமதே! வெற்றி நமதே!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
”குடும்பச் சண்டையில் உள்ள வன்மத்தை இளைஞர்கள் மீது கொட்டாதீர் : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதிலடி!
-
முதலமைச்சர் கோப்பை – 2025 நிறைவு! : கோப்பைகள் மற்றும் பரிசுகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!