Tamilnadu
தந்தை பெரியார் குறித்து அவதூறு பேச்சு : ரஜினிக்கு எதிராகக் குவியும் புகார்கள் - த.பெ.தி.க எச்சரிக்கை!
1971ல், தந்தை பெரியார் நடத்திய பேரணியில் ராமர், சீதை உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது என துக்ளக் ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியிருப்பதற்கு கடும் எதிர்ப்பும் கண்டனங்களும் எழுந்து வருகின்றன.
அவ்வகையில், நேற்று முனதினம், கோவை மாநகர் காவல் நிலையத்தில் பெரியார் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியுள்ள நடிகர் ரஜினி மீது சட்டப்பிரிவுகள் 153ஏ, 505ன் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
Also Read: தந்தை பெரியாரின் புகழுக்கு களங்கம் விளைவிப்பதா? - ரஜினிகாந்த் மீது நடவடிக்கை கோரி கோவையில் புகார்!
இதேபோல, நேற்று புதுச்சேரியில் பெரியகடை காவல் நிலையத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பொய்த் தகவல் பரப்பிய ரஜினிகாந்த் மீது நடவடிக்கைக் கோரி புகாரளிக்கப்பட்டது.
இந்நிலையில், பெரியார் குறித்து அவதூறாகப் பேசிய நடிகர் ரஜினிகாந்த் மன்னிப்புக் கேட்காவிட்டால் வருகிற 23ம் தேதி காலை 10 மணியளவில் சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தை முற்றுகையிடுவோம் என தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கோவை ராமகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
Also Read
-
SIR : “அதிமுக - பாஜக களத்துக்கு வராதபோதுதான் சந்தேகமாக இருக்கிறது...“ - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
235-க்கும் மேற்பட்ட உணவு வகைகள்... 4 நாட்களுக்கு... களைகட்டும் பெசன்ட் நகரில் உணவுத் திருவிழா!
-
இறந்த 4 மாதக் குழந்தையை 20 ரூ. பிளாஸ்டிக் பையில் கொண்டு சென்ற அவலம்.. ஜார்கண்ட் சோகத்தின் பின்னணி என்ன?
-
SIR மூலம் சுமார் 1 கோடி வாக்காளர்கள் நீக்கம்: “தமிழ்நாட்டை குறிவைத்துள்ள பாஜக” - திருமாவளவன் MP கண்டனம்!
-
மனித விலங்கு மோதல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை.. அதிநவீன கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் திறப்பு!