Tamilnadu
பெண் ஊழியர்கள் உடை மாற்றுவதை வீடியோ எடுத்த பெட்ரோல் பங்க்? : தட்டிக்கேட்ட ஊழியர் மீது தாக்குதல்!
கோவை மாவட்டம் சாய்பாபா காலனி அருகேயுள்ள ரூட்ஸ் நிறுவனத்தின் பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது. இந்த பங்க்கில் கோவை கண்ணப்பநகர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் அவரது மனைவி உட்பட பத்துக்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றுகின்றனர்.
இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பெட்ரோல் பங்க்கில் பெண்கள் உடைமாற்றும் அறையில் சூப்பர்வைசர் சுபாஷ் ரகசிய கேமரா வைத்து வீடியோ எடுத்துள்ளார். இந்தச் சம்பவம் தெரியவந்ததை அடுத்து சுபாஷை பணியில் இருந்து நீக்கியுள்ளார்.
இந்த சம்பவத்தை மணிகண்டன் தான் வெளியில் கொண்டுவந்ததாகவும், அதனால் நிர்வாகம் அவரைப் பழிவாங்கும் நோக்கத்தில் இருந்ததாகவும் தெரிகிறது. இந்நிலையில் சுபாஷ் எடுத்த ரகசிய வீடியோ வெளியாகியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வீடியோ வெளியானது எப்படி எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆனால் பங்க் நிர்வாகம் முறையாக பதில் அளிக்காததால், வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தின் போது பங்க் நிறுவன அதிகாரியான கவிதாசன், மேலாளர் சங்கர்கணேஷ் உள்ளிட்டோர் மணிகண்டனைத் தாக்கியுள்ளனர்.
இதையடுத்து மணிகண்டன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் தன் மீது நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் காவல்துறையில் பொய் புகார் அளித்துள்ளதாகவும் சிகிச்சை பெறும் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ரூட்ஸ் நிறுவனத்தினர் மணிகண்டனை தாக்கவில்லை என்றும், 4 மாதங்களுக்கு முன்பு நடந்த பிரச்னைக்கும் இந்த பிரச்னைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் கூறியுள்ளனர்.
மேலும் போலிஸார் தரப்பில் கூறும்போது, ரூட்ஸ் நிறுவனத்தினர் வீடியோ எடுத்ததாக யாரும் இதுவரை புகார் அளிக்கவில்லை. தற்போது இந்தச் சம்பவத்திற்கு பிறகே தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!