Tamilnadu
புத்தாண்டையொட்டி டாஸ்மாக் மூலம் கல்லா கட்டிய அ.தி.மு.க அரசு : படிப்படியாக மதுக்கடைகள் மூடல் இதுதானா?
தமிழகத்தில் மதுக்கடைகளை படிப்படியாக மூடுவோம் என அறிவித்துவிட்டு படிப்படியாக மது விற்பனையை அ.தி.மு.க அரசு அதிகரித்து வருவது கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
அரசின் வருவாயை பெருக்குவதற்கு பண்டிகை காலத்தின் போது இலக்கு நிர்ணயித்து மதுபானங்களின் விலையை அதிகரித்து அ.தி.மு.க அரசு தொடர்ந்து விற்பனையில் ஈடுபட்டு வருகிறது.
முன்னதாக கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது தொடர் விடுமுறை தினமாக இருந்ததால் நாள் ஒன்றுக்கு பலநூறுகோடிக்கணக்கில் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. அதேபோல, தற்போது ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டும் மது விற்பனையில் இலக்கு நிர்ணயித்து விற்பனை நடந்துள்ளது.
அதில், டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய இரு தேதிகளில் மட்டும் சுமார் 300 கோடி ரூபாய்க்கு தமிழகத்தில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. புதிய மதுபான ரகங்களை அறிமுகம் செய்து உயர் ரக மதுவிற்பனை நிலையங்கள் மூலமும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், புத்தாண்டை முன்னிட்டு தமிழகத்தில் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1ந்தேதி ரூ.350 கோடி, கிறிஸ்துமஸை முன்னிட்டு ரூ. 100 கோடி என ரூ.450 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதற்கு சமூக ஆர்வலர்கள் கடுமையான கண்டனங்களுடன் குற்றச்சாட்டுகளையும் முன்வைக்கின்றனர். இது தொடர்பாக பேசியுள்ள சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் சிவ.இளங்கோ, “தமிழகத்தில் படிப்படியாக மதுக்கடைகளை மூடுவதாக தேர்தல் அறிக்கையில் தெரிவித்த அ.தி.மு.க அரசு, படிப்படியாக மது விற்பனையின் மூலம் வருவாயை கூட்டுவதில் தான் கவனம் செலுத்தி வருகிறது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் அடிப்படை வசதிகளே இல்லாமல் தவித்து வருகின்றனர். அவற்றுக்கெல்லாம் இலக்கு நிர்ணயித்து நடவடிக்கை எடுக்காமல் மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயிப்பது வெட்கக்கேடானது” எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதேபோல, அரசின் வருமானத்தில் 3ல் ஒரு பங்கு டாஸ்மாக் மூலமே கிடைப்பதால் மதுக்கடைகளை மூடாமல் வருவாயைப் பெருக்குவதையே குறிக்கோளாக வைத்து அரசு செயல்படுகிறது என டாஸ்மாக் ஊழியர் சங்கத் தலைவர் பாலுசாமி கூறியுள்ளார்.
காத்தலும், வகுத்தலும் என்ற வள்ளுவனின் வாக்குப்படி தெளிவான கொள்கைகளை வகுத்து வருவாயை பெருக்காமல், மதுவை மட்டுமே நம்பி இருப்பது முறையான அரசு நிர்வாகமாக அமையாது என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
Also Read
-
முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு !
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்... மீண்டும் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் பலி !
-
“தீபஒளியையொட்டி பேருந்துகள் மூலம் 7,88,240 பயணிகள் பயணம்!” : அமைச்சர் சிவசங்கர் தகவல்!
-
“வக்கற்ற ஆட்சி நடத்தியவர் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கை விடுவதா?”: பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டம் - முதலமைச்சரின் மகத்தான அறிவிப்பு! : முரசொலி தலையங்கம் புகழாரம்!