Tamilnadu
11-ம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை? : கோவையில் நடந்த கொடூரம்! - அதிர்ச்சி தகவல்
கோவை மாவட்டம் கீரநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி ஒருவர் தனது பிறந்தாளை கொண்டாடுவதற்காக ஐஸ்வர்யா நகர் பகுதியில் உள்ள பூங்காவிற்குச் சென்றுள்ளார்.
ஆனால், வெளியில் சென்ற குழந்தை வீடு திரும்பவில்லை என மாணவியின் பொற்றோர்கள் தேட ஆரம்பித்துள்ளனர். நீண்ட நேரத்துக்கு பிறகு அழுத நிலையில் மாணவி வந்துள்ளார்.
அப்போது மாணவியிடம் விசாரித்ததில் மணிகண்டன் என்பவர் மாணவியிடம் தவறாக நடந்துக்கொண்டதாக தெரிய வந்துள்ளது. மேலும் அந்த சம்பவத்தை மற்ற சிலர் செல்போனில் வீடியோ எடுத்ததகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து மாணவியின் பெற்றோர்கள் அருகில் இருந்த ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர். புகாரைப் பெற்றுக்கொண்ட போலிஸார் இதுகுறித்து விசாரணை நடத்தினார்கள்.
பின்னர் தீவிர விசாரணையில் ஈடுப்பட்ட ஆர்.எஸ்.புரம் போலிஸார் இந்த சம்பவத்தில் தொடர்புடைய ராகுல், கார்த்திகேயன், நாராயணமூர்த்தி உட்பட 4 பேரை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மணிகண்டனை போலிஸார் தேடி வருகின்றனர். இந்நிலையில், 11-ம் வகுப்பு மாணவியிடம், இளைஞர்கள் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், பாலியல் வன்கொடுமை செய்யவில்லை என்று போலிஸார் தரப்பில் கூறப்படுகிறது. இதில் கூட்டுபாலியல் வன்கொடுமை என வெளிவந்த தகவலுக்கு காவல்துறையினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
Also Read
-
இந்திய உரிமையை நிலைநாட்ட பேச்சுவார்த்தை தொடங்குமா ஒன்றிய பா.ஜ.க. அரசு? : முரசொலி தலையங்கம் கேள்வி!
-
“ஏழை மாணவர்களின் விடுதிகள், இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்!” : முதலமைச்சர் அறிவிப்பு!
-
பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தவர் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் !
-
"பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது" - அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா பேட்டியால் சலசலப்பு !
-
அங்கன்வாடி மையங்கள் மூடலா? மீண்டும் போலி செய்தி வெளியிட்ட தினமலர்.. உண்மை என்ன? - விவரம் உள்ளே!