Tamilnadu
42 கோ ஆப்டெக்ஸ் நிலையங்களை அதிரடியாக மூடிய அ.தி.மு.க அரசு: காரணம் என்ன தெரியுமா?
தமிழக அரசின் நிறுவனமான கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலம், வேஷ்டி, சட்டை, போர்வை, புடவைகள் என பல்வேறு ரகங்களில் ஜவுளிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மாநில முழுவம் உள்ள கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட ஜவுளிகள் வாங்கி கோ ஆப்டெக்ஸிஸ் விற்கப்படுகிறது.
ஆனால், போதுமான அளவுக்கு விளம்பரங்கள் செய்யப்படாததால் கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்துக்கு ஆண்டுதோறும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. அதன்படி, கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 40 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த வருவாய் இழப்பை காரணம் காட்டி, கடந்த 3 ஆண்டுகளில் 42 கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களை அ.தி.மு.க ஆட்சியாளர்கள் மூடியுள்ளனர். கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 18 விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் வெறும் 168 நிலையங்கள் மட்டுமே செயல்பட்டு வருகிறது.
தற்போது இயங்கி வரும் கோ ஆப்டெக்ஸ் நிலையங்களிலும் வருவாயை பெருக்க எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அங்கும் விற்பனை மந்தமாக உள்ளது. ஆகையால் அவற்றையும் மூடுவதற்கு அ.தி.மு.க அரசு முயற்சித்து வருகிறது. இதனால் கோ ஆப்டெக்ஸ் நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வேலையை இழக்கும் நிலை ஏற்படும் என அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
Also Read
-
“SIR-க்கு பிறகு தமிழ்நாட்டில் 97,37,832 வாக்காளர்கள் நீக்கம்!” : தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் தகவல்!
-
வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இடம்பெறவில்லையா? : சென்னை மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!
-
சென்னையில் 14.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! : மாவட்ட தேர்தல் ஆணையர் சொல்வது என்ன?
-
சென்னையில் மின்சாரப் பேருந்து பணிமனை: துணை முதலமைச்சர் தொடங்கி வைத்த மின்சார பேருந்துகளின் சிறப்புகள்!
-
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்க்க தடை விதித்த சென்னை மாநகராட்சி : காரணம் என்ன?