Tamilnadu
தமிழகத்தில் 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - புல்புல் புயலின் தாக்கமா? வானிலை நிலவரம் !
மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில், நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுமண்டலம் வலுப்பெற்று தற்போது புயலாக உருவாகியுள்ளது. புல் புல் என பெயரிடப்பட்ட இந்த புயலானது வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து, தீவிர புயலாக வலுப்பெற்று மேற்கு வங்கம் மற்றும் வங்கதேச கரையை நோக்கி நகரக் கூடும்.
ஆகையால் தமிழக மீனவர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு மத்திய வங்கக்கடல் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் நவ.,8-10 வரை வெப்பச்சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் மிதமான மற்றும் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக திருப்பூரில் 5செ.மீ, சிவகங்கையில் 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வறண்ட வானிலையே தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“Climate Action, Clean Energy ஆகிய இலக்குகளில் தமிழ்நாடு முதலிடம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
பீகாரில் மகளிர் திட்டத்தில் முறைகேடு : ஆண்களின் வங்கி கணக்தில் வரவு வைக்கப்பட்ட பணம்!
-
விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதை தடுக்க நடவடிக்கை என்ன? : நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய திமுக எம்.பி!
-
மாதவிடாய் சுகாதாரத் திட்டம் பயன் தருகிறதா? : ஒன்றிய அரசுக்கு தி.மு.க MP கேள்வி!
-
“GST நஷ்டத்திற்கு இழப்பீடு வேண்டும்” : நாடாளுமன்றத்தில் ராஜேஷ்குமார் MP வலியுறுத்தல்!