Tamilnadu
‘இந்தி திணிப்பு என்பது மாநிலங்களை அழிக்க பா.ஜ.க எடுத்திருக்கும் முயற்சி’ - கே.பாலகிருஷ்ணன் தாக்கு!
தாய் மொழி பாதுகாப்பு மற்றும் இந்தியாவின் பல்வேறு தேசிய இனங்கள் மீது இந்தி மொழியை கட்டாயமாகத் திணிக்கும் பா.ஜ.க அரசின் முயற்சியை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் மாநாடு நடைபெற்றது.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் மற்றும் தென் மாநிலங்களைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இந்த மாநாட்டில் பேசிய கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், “இந்தி திணிப்பு என்பது மொழி திணிப்பு மட்டுமல்ல, அது மாநிலங்களை அழிக்க பா.ஜ.க எடுத்திருக்கும் முயற்சியாகும். மேலும் ஒரே நாடு, ஒரே மொழி என்று இந்தியை வலிந்து திணிப்பதுடன், சமூகத்தை சமஸ்கிருதமயமாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்தி மொழி வளர்ச்சிக்கு பலநூறு கோடி ரூபாய்களை வாரி வழங்கும் மத்திய அரசு, இதர மொழிகளின் வளர்ச்சிப் பற்றி எள்ளளவும் கவலைப்படவில்லை. சொந்த விருப்பத்தின் அடிப்படையில் எவர் ஒருவரும் இந்தி உட்பட எந்த மொழியையும் கற்பது அவரது உரிமையாகும். அனைத்து மொழிகளுக்கும் சமத்துவமளிக்க வேண்டும் என்றார்.
மேலும் பேசிய அவர், “இந்தியாவிலேயே மொழிப் போராட்டத்தை நடத்தி ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்த மாநிலம் தமிழ்நாடு, அத்தைய தமிழ்நாடில் தற்போது இந்தியை திணிக்க மோடியும், அமித் ஷாவும் முயற்சித்து வருகின்றனர்.
குறிப்பாக, தமிழ்நாட்டில் மழலையர் பள்ளிகளில் கூட தமிழ் இல்லாத நிலை உள்ளது. அதே போல் உயர்நீதிமன்றத்தில் கூட தமிழ் உள்ளே நுழைய முடியாத நிலை உள்ளது. வேலை வாய்ப்பு அளிக்கும் கல்வியில் தமிழ் இடம்பெறவேண்டும், பொறியியல், மருத்துவம் போன்ற படிப்புகளும் தமிழில் வராதா?” என கேள்வி எழுப்பினர்.
மேலும், பா.ஜ.க பல மொழிகளை அழிக்க நினைக்கிறது, தாய்மொழியை பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது, தாய் மொழி பாதுகாப்பு மற்றும் இந்தி திணிப்பு எதிர்ப்பு தென்னிந்தியாவின் குரலாக உள்ளது, விரைவில் இந்தியாவின் குரலாக மாறும்” என அவர் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“பாவம், இந்தி பேசும் மக்களை ஏமாற்றலாம்.. ஆனால் தமிழ்நாட்டு மக்களை..” -பாஜகவை வெளுத்து வாங்கிய தயாநிதி MP!
-
உலக மனித உரிமைகள் நாள் : சுயமரியாதையைப் பாதுகாத்திட உறுதி ஏற்போம்! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
வெல்லும் தமிழ்ப் பெண்கள் : மகளிர் உரிமைத் திட்டத்தின் 2-வது கட்ட விரிவாக்கம்.. எப்போது தொடக்கம்? -விவரம்!
-
4 ஆண்டுகள் - ரூ.8,230.55 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்பு : இந்து சமய அறநிலையத்துறை அதிரடி!
-
மதுரை கோவைக்கு மெட்ரோ ரயில் புறக்கணிப்பு ஏன்? : மாநிலங்களவையில் கேள்வி எழுப்பிய கனிமொழி NVN சோமு MP!