Tamilnadu

பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்ட விஜய் நீதிமன்றத்தில் சரண்!

காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூர் அடுத்த வேங்கடமங்களம் பகுதியை சேர்ந்த முகேஷ் குமார் என்பவர் தனியார் பால்டெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல் முகேஷ் அதே வேங்கடமங்கலம் பார்கவி அவன்யூவில் உள்ள தனது நண்பர் விஜய் வீட்டிற்கு சென்று வீட்டினுள் அறையில் அமர்ந்து பேசிகொண்டிருந்துள்ளார்.

விஜய்யின் தம்பி உதயா மட்டும் வெளியே அமர்ந்திருந்த போது திடீறென வெடிக்கும் சத்தம் கேட்டு உள்ளே ஓடி பார்த்துள்ளார் அப்போது முகேஷ் நெற்றியில் குண்டு துளைத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். உடனே கையில் துப்பாக்கி வைத்திருந்த விஜய் தம்பியை கண்டதும் தப்பி ஓடியுள்ளார்.

பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் முகேஷ்

பின்னர் விஜய்யின் தம்பி உதயா அளித்த தகவலின் பேரில் அக்கம்பக்கத்தினர் மற்றும் தாழம்பூர் போலீசார் சம்பவ இடம் வந்து முகேஷை மீட்டு தனியார் மருத்துவமனை கொண்டு சென்று பின்னர் உயர் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி முகேஷ் உயிரிழந்தார்

பின்னர் தகவலறிந்து காஞ்சிபுரம் காவல்துறை கண்கானிப்பாளர், துனை கண்கானிப்பாளர் உள்ளிட்டோர் சுமார 50 போலீசாருடன் வேங்கடமங்கலம் ஊராட்சியிலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் தப்பி சென்ற விஜய்யை தேடி வருகின்றனர்.

மேலும் விஜய்யின் தம்பி உதயாவிடம் துப்பாக்கி எங்கு கிடைத்தது எந்த காரணத்திற்காக சம்பவம் நடந்தது போன்றவை குறித்து விசாரித்து வருகின்றனர். துப்பாக்கியால் சுடப்பட்ட கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்

பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் தலைமறைவான விஜய் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நீதித்துறை நடுவர்மன்ற நீதிபதி காயத்திரிதேவி முன்னிலையில் சரண்டர் ஆனார்.

குற்றவாளியை தாழம்பூர் போலிஸார் 15 நாட்கள் போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்த நீதிபதியிடம் மனு கொடுத்துள்ளனர். முகேஷும் விஜய்யும் நீண்ட கால நண்பர்கள் அவரை கொலை செய்யும் நோக்கம் அவருக்கு இல்லை, விஜய்யும் முகேஷும் துப்பாக்கியை வைத்து ஒருவர் நெற்றியில் ஒருவர் என மாறி மாறி விளையாடியதாகவும் விஜய் நெற்றியில் துப்பாக்கியை முகேஷ் விளையாடும்போது வெடிக்கவில்லை எதிர்பாராத விதமாக முகேஷ் நெற்றியில் துப்பாக்கியை வைத்து விஜய் அழுத்தும் போது வெடித்துவிட்டது.

ஏதேச்சையாக நடந்த சம்பவத்தால் அச்சத்தின் காரணமாக விஜய் தப்பி ஓடி வழக்கறிஞர்கள் மூலம் சரண்டராகி உள்ளார் என விஜய்யின் வழக்கறிஞர்கள் தரப்பில் கூறப்படுகிறது. மேற்கொண்டு நடைபெறும் விசாரணையில்தான் துப்பாக்கி யாருடையது அதற்கான உரிமம் உள்ளதா விஜய் கைக்கு துப்பாக்கி எப்படி வந்தது மற்றும் எந்த வகையான துப்பாக்கி என்பன குறித்து அடுத்த கட்ட விசாரணையில் தெரியவரும்.