Tamilnadu
வங்கக்கடலில் உருவானது புல்புல் புயல்; மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது என எச்சரிக்கை!
அந்தமான் பகுதியில் நேற்று உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்புபகுதி மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது இன்று புயலாக வலுப்பெறக் கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.
தற்போதைய நிலவரப்படி இது அடுத்த 24 மணிநேரத்தில் வடமேற்கு திசையில் மேற்கு ஒரிசா மற்றும் மேற்கு வங்கக்கடலை நோக்கி நகரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையொட்டி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்தில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் கூறியுள்ளது.
இந்நிலையில், அந்தமான் அருகே உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி புல்புல் புயலாக வலுப்பெற்றுள்ளது. இது அந்தமானில் இருந்து 400 கி.மீ தொலைவில் தீவிர புயலாக உருவாகியுள்ளது என்றும் நாளை இந்த புயல் அதி தீவிரமாக வலுப்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மணிக்கு 130-140 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் கிழக்கு மத்திய வங்கக்கடல் பகுதி கடும் சீற்றத்துடன் காணப்படும். இதனையொட்டி நவ.,11ம் தேதி வரை அந்தமான் கடல் பகுதி, மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கும், மத்திய வங்கக்கடல் மற்றும் வடக்கு கடற்கரை பகுதிக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Also Read
-
சமூகநீதித் தேரைப் பின்னுக்குத் தள்ளுவதா? : விஜய்க்கு தி.க. தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கேள்வி!
-
“தமிழோடு விளையாடியவர்கள் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை” : தமிழ்த்தாய் வாழ்த்து அவமரியாதை - திமுக கண்டனம்
-
ராமநாதபுரத்தில் பரபரப்பு : ரூ.50 லட்சம் லஞ்சம் கேட்ட சார்பதிவாளர் கையும் களவுமாகக் கைது!
-
”CSK நிர்வாகத்திற்கும் தோனிக்கும் பிரச்சனையா.. அஸ்வின் கிளப்பிய புதிய புயல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!”
-
ஓடி ஒளியாதீர்கள் CM Sir : மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு - கனிமொழி என்.வி.என்.சோமு கண்டனம்!