Tamilnadu
கொடநாடு கொலை வழக்கு : சயான் மீதான குண்டர் சட்டம் ரத்து - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் காவலாளி கொலை மற்றும் அங்கு நடைபெற்ற கொள்ளை வழக்கில் கைதான சயான் கைது செய்யப்பட்டார்.
அவர் மீது, பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் கோவை மத்திய சிறையில் சயானை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைக்க காவல்துறையின் பரிந்துரையின் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர், மார்ச் 21ம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.
இதனைத்தொடர்ந்து, தன் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்ய கோரி சயான் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், விபத்தில் மனைவியையும், பிள்ளையையும் பறிகொடுத்த சம்பவத்தை தன் மீதான குற்ற வழக்குகளுடன் தொடர்புபடுத்தியிருப்பதாகவும், கோடநாடு கொலை கொள்ளை விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து பேசாமல் தடுப்பதற்காகவே தன்னை குண்டர் சட்டத்தில் அடைத்திருப்பதாக என சயான் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் 409 பக்கங்களில் தமிழில் ஆவணங்கள் கொண்ட குண்டர் சட்ட கைது உத்தரவை தமிழ் தெரியாத தனக்கு படித்துகாட்டினர். மலையாளத்தில் ஆவணங்கள் வழங்கப்படவில்லை எனவும் சயான் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு சயானுக்கு விதிக்கப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
Also Read
-
மிரட்டும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் : ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை குறைக்கும் பா.ஜ.க அரசு திட்டம்!
-
கொழுந்து விட்டு எரிந்த சொகுசு பேருந்து : 25 பேர் பலி - ஆந்திராவில் நடந்த துயர சம்பவம்!
-
மனப்பாடம் செய்து படித்தாலும் தமிழ்நாட்டில் பழனிசாமி Failதான் ஆவார் : அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
-
“A Sun from the south” : நூலினை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
சர்வதேச போட்டியில் பங்கேற்கும் 33 வீரர்கள் : ரூ.43.20 லட்சம் நிதியுதவி வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!